முந்தைய பகுதிகளை படிக்க
சில பைகளில் தேவையில்லாத பொருட்கள் இருப்பதை போல்
சிலர் மனங்களில் வெற்று நினைவுகள் மட்டுமே நிரப்பியிருக்கும். அவற்றால் ஒரு பயனும் இல்லை.
ஒருவழியாக பல பைகள் (Bags) ஒன்றுகூடி, முயற்சித்து, பல தடைகளை தாண்டி தமிழாகிய அவளை என்னுடன் இணைத்து பைந்தமிழ் காதலை தோற்றுவித்தன... அப்பைகளுக்கு மிகவும் நன்றி...
இறுதி ஆண்டின் இறுதி தேர்வு துவங்க இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் அதில் வெற்றி பெற்று விட்டேன். ஆம்! என் காதலெனும் தேர்வில் கிடைத்த வெற்றியும்... அவ்வெற்றி தந்த உற்சாகமும் கல்லூரி இறுதி தேர்விலும் எதிரொலித்தது... ஆனால் இனிமேல் தான் உண்மையான சோதனை ஆரம்பம்... நாங்கள் எங்கள் வாழ்க்கையில் கடக்க வேண்டிய படி இன்னும் ஒன்று மீதம் உள்ளது... அதுதான் வேலை தேடுவது... அவளுக்கு இருந்த ஆங்கில அறிவுக்கு எளிதில் வேலை கிடைத்துவிட்டது. நான் தான் இக்கடினமான படியை கடக்க ஓராண்டு காலமாக முயற்சித்து வருகிறேன்.
எங்கள் காதல் உறுதியானதும் நாங்கள் ஒன்று கூடி பேசி அதைவிட ஓர் உறுதியான முடிவை மேற்கொண்டோம்... நாங்கள் பிற காதலர்களை போல் அடிக்கடி சந்திக்கப் போவதில்லை என்ற விசித்திர முடிவுதான் அது... நாங்கள் இருவரும் பெரிதும் மதிக்கும் அவளின் அப்பா அமைத்துக் கொடுத்த பாதையில் நடக்க வேண்டும் என உறுதி பூண்டோம்... முதலில் ஒரு நல்ல வேலை தேட வேண்டும்... அதன் பிறகு எங்கள் காதலை அவரிடம் தெரிவித்து அவரின் சம்மதம் வாங்க வேண்டும்... அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்ற சபதத்தை மேற்கொண்டோம்...
காதல் தோன்றியபின் காணாமல் இருத்தல் தகுமோ?... அடிக்கடி இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது பார்க்காமல் இருக்க முடியாது அல்லவா? எனவே எங்களை சேர்த்து வைத்த சாய்பாபா கோவிலில் வியாழன்தோறும் ஆரத்தி நேரத்தில் சந்திப்பது என முடிவு செய்தோம்... அதன்படி நாங்கள் முதல் வாரத்தில் சந்தித்தபோது நான் பரிசாக கொடுத்த அந்த பிங்க் நிற கைப்பையை மீண்டும் என்னிடமே தந்தாள். "இது உன்கிட்டேயே இருக்கட்டும் வெற்றி... இத கொடுக்கும்போது நீ ஒரு நண்பனா நெனச்சு கொடுத்த... So நான் உனக்கு அப்படியே இதை திருப்பி கொடுத்துடரேன்... எப்ப உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குதோ அப்ப அத எனக்கு ஒரு காதலனாக திருப்பிக் கொடு... அதுவரைக்கும் இது உன்கிட்டயே இருக்கட்டும்" என்றாள். அன்று முதல் அவளை மனதில் சுமக்கும் நான், கைகளிலும் பை வடிவில் சுமக்க ஆரம்பித்தேன்...
இன்று (2006ம் ஆண்டு)
அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் நாங்கள் சந்திக்கும் போது அப்பையை அவளிடம் தரப்போகும் அந்தத் திருநாளுக்காக அவள் காத்திருக்கிறாள்... அதை அவளிடம் கொடுக்கவே நானும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இன்றுடன் 51 வாரங்கள் ஆகிவிட்டன... ஆம்! சிலர் நாட்களை எண்ணுவது போல நான் அவளை சந்திக்கும் வாரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்... அவள் கொடுத்த அந்த கைப்பையை நான் நேர்முகத்தேர்வுக்கு போகும் பையின் (Bag) மற்றொரு அறையில் பத்திரமாக வைத்திருக்கிறேன்... இதையே நான் யாருக்கும் காண்பிக்காமல் பாதுகாக்கும் எனது பொக்கிஷம் என எனது இந்த கதையைப் படிக்கும் நேயர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தேன்...
இப்பொழுது நான் செல்லும் பேருந்து நாங்கள் வசிக்கும் பகுதியான மேற்கு மாம்பலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் ஜன்னலோரத்தில், அளப்பரியா ஆனந்தத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்... எனது ஓராண்டு கால விடாமுயற்சிக்கு இன்று பலன் கிடைத்துவிட்டதல்லவா???? தற்செயலாக இன்று வியாழக்கிழமையும் கூட... மாலை நேரமும் ஆகிவிட்டது... எனவே அவள் நிச்சயம் எனக்காக சாய்பாபா கோயிலில் காத்திருப்பாள்... எனவே நேராக வீட்டுக்குச் செல்லாமல் முதலில் அவளை சந்திக்க வேண்டும். அவளை சந்தித்து இந்த பிங்க் நிற பையை (Handbag) அவளிடம் ஒப்படைக்க வேண்டும்... அவள் எதிர்பார்த்த சர்ப்ரைஸை அவளுக்கு இன்று தரவேண்டும்... நண்பனாக அல்ல... அவளின் ஆசைப்படி ஒரு காதலனாக....
நான் மெல்ல என் மடியில் இருந்த பையின் (Backbag) ஒரு அறையை திறக்கிறேன்... அதிலிருந்து அந்த பிங்க் நிற கைப்பையை வெளியே எடுக்கிறேன்... என் விரல்களால் மென்மையாக அதை தடவி கொடுக்கிறேன்... மற்றொரு அறையிலிருந்து வேலை கிடைத்தற்கான பணி ஆணையை எடுத்து... அதை அந்த கைப்பைக்குள் வைக்கிறேன்... இதுவே நான் அவளுக்கு முதன்முதலில் தரப்போகும் காதல் கடிதமாகும். இதை முதலில் அவளுக்கு தர வேண்டும். அவளை இன்ப மழையில் நனைக்க வேண்டும். பிறகு அவள் மூலமாகவே அப்பையை அவள் அப்பாவிடம் கொடுக்கச் சொல்ல வேண்டும்... இதுவே எனது திட்டமாகும்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.
அன்று தற்செயலாக இப்பையை திறந்து தவறான ஒரு கடிதத்தை படித்த அவருக்கு பரிகாரமாக இச்செயல், ஒரு நற்செயலாக அமைய வேண்டும். படிப்பு, வேலை அதன்பிறகு காதல், திருமணம் என அவர் வகுத்துக் கொடுத்த பாதையிலேயே நாங்கள் பயணிக்கிறோம் என்பதை அவரை உணரச் செய்ய வேண்டும். அவரின் பரிபூரண சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறேன்... எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டியபடி...
நான் இவ்வாறாக பல சிந்தனையில் மூழ்கியதில் நான் இறங்கவேண்டிய மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பேருந்து நிறுத்தம் வந்ததை கவனிக்கவில்லை... நடத்துனர் விசிலடித்து, ஓட்டுனர் பேருந்தை மீண்டும் கிளப்பிய பின்னரே அதை உணர்ந்தேன்... என் கையில் இருந்த பைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக பேருந்திலிருந்து இறங்கினேன். அப்போது என் கையிலிருந்த பிங்க் நிற கைப்பையில் பிணைக்கப்பட்டிருந்த சிறு சங்கிலி, பேருந்து படியில் உள்ள கைப்பிடியில் சிக்கியதை கவனிக்கவில்லை...
ஒரே ஒரு நொடிதான்... நிலைதடுமாறி சாலையில் விழுந்தேன்... பின் மண்டையில் பலத்த அடி...
எனது உயிரானது உடலெனும் பையை விட்டு வெளியேறி காற்றில் கலந்தது...
அவளின் சுகமான நினைவுகளோடு....
பையால் துவங்கிய எங்கள் உறவை,
பையே முடித்து வைத்தது நிரந்தரமாக...
காயமே இது பொய்யடா- வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண் பாண்டம் ஓடடா!'
- பட்டினத்தார்
பைந்தமிழ் காதல் முற்று பெற்றிற்று.
பின்குறிப்பு
எனக்கு தெரிந்த ஒரு நபர் வேலை கிடைத்த அன்றே இறந்துவிட்டார். அவர் வாழ தொடங்கும் முன்பே அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் மனதில் இது போன்ற பல ஆசைகள், விருப்பங்கள் இருந்திருக்கக் கூடும். இதுவே என் மனதை பாதித்த மற்றும் இக்கதையை எழுதத் தூண்டிய சம்பவமாகும். மற்றபடி வேண்டுமென்றே கதையை சோகமாக முடிக்கவில்லை.
எனினும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மற்றொரு இறுதிப்பகுதி.
இதோ உங்களுக்காக...
En intha Kola Veri, swlvaragavan , Bala fan a neenga
ReplyDeleteI am sorry. But the climax is based on real incident...
DeleteAnnnaaaaa..... Ponga annnaaaa.....
ReplyDeleteVery very sad
ReplyDeleteHmm.... Hmm I expected some other climax. Anyway ok......
ReplyDeleteFeelings nice ......Nalla unarchi purvamana kathai oru Nalla mudivai petru erukkalam ...... Good writer..
ReplyDelete