பைந்தமிழ் காதல் - 12. Broken trust


பைகளும் சரி மனிதர்களும் சரி 
கனமாக இருந்தால் மட்டுமே மதிப்பு
இல்லையேல் சிறுகாற்றும் 
அவற்றை அலைக்கழிக்க கூடும்.
 



ஒரு மெல்லிய விசும்பலுடன் பேச ஆரம்பித்த அவள், 

"உம்மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். You have broken my trust."

நான் ஏதும் புரியாமல் விழித்தேன். 

"நான் உன்ன ரொம்ப genuine personனு நினைச்சேன் ஆனா அப்படி நெனச்சதுதான் தப்பு. நீயும் மத்தவங்க மாதிரி தான்" 

நான் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க, அவளோ தலைகுனிந்தவாறு தொடர்ந்தாள்... "உன்னால் எப்படி மனசுல ஒன்ன வைச்சுகிட்டு வெளியில வேற மாதிரி பழக முடிந்தது?" 

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை நேரடியாகவே கேட்டு விட்டேன் "நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்? "

"என்ன தப்பு பண்ணினியா?" சற்றே கோபத்துடன் "மனசுல love வெச்சுக்கிட்டு ஒரு friend மாதிரி பேசி பழகி நடிச்சு இருக்க..." 

இவளுக்கு எப்படி தெரிந்தது??? 
என ஆச்சரியத்துடன் நான் பார்க்க, தொடர்ந்த அவள் "அது கூட பரவாயில்லை... இந்த வயசுல இது சகஜம் என்னால accept பண்ணிக்க முடியுது. ஆனால் annual day அன்னிக்கி நாம அவ்வளவு விஷயம் பேசணுமே... அன்னிக்காவது நீ உண்மைய சொல்லி இருக்கலாம்ல..." 

நான் மௌனத்தை தொடர அவள் பேச்சை தொடர்ந்தாள்.

"எங்க அப்பாவுக்கு அப்புறம், You are the most trustful personனு நான் நினைச்சேன். அதனால தான் உன்ன அவர்கிட்ட அறிமுகம் செய்ய நெனச்சேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர் எனக்கு எல்லா விஷயத்துலயும் முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறாரு. அதே போல நானும் அவர் தப்பா நெனைக்கற மாதிரி இதுவரைக்கும்  எதுவும் செஞ்சதில்ல... ஆனா first time அவரு என்ன தப்பா நினைக்கிற மாதிரி ஆயுடுச்சு... அதுவும் உன்னால..."
 
என்னிடத்தில் மீண்டும் மௌனம் சற்று குழப்பத்துடன்... 

"செய்யறதையும் செஞ்சுட்டு அவர் சொன்ன வார்த்தைகளை அவர் கிட்டேயே சொல்லி கிண்டல் வேற பண்ற... என்ன மட்டுமில்ல அவரையும் சேர்த்து அசிங்கபடுத்தறது தான் உன் எண்ணமா? அதுக்காக தான் என் வீட்டுக்கு வந்தியா?" 

நான் பேச வாயெடுக்கும் முன் மேலும் தொடர்ந்த அவள் "இல்ல உன்ன அவருக்கு அறிமுகம் பண்ணி வச்சு நான் தான் அவரை அசிங்கப்படுத்திவிட்டேன்... You know இப்ப கூட அவர் என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல... Such a gentleman he is.... அவரப் போயி உன் கூட..."

இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை... "நீ கூப்பிட்டு தானே நான் வந்தேன்?"

"அதுதான் நான் செஞ்ச தப்பு... friendன்ற போர்வைல love பண்ணிட்டு இருந்த ஒருத்தன genuineனு நம்பி கூப்பிட்டது தான் தப்பு..." என கொதித்தெழுந்தாள்...

அதிர்ச்சியான நான் ஒருவழியாக சமாளித்து "அப்படியெல்லாம் இல்ல தமிழ்" என நான் கெஞ்ச ஆரம்பிக்க...

"இப்ப கூட அன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா இருக்கணும்னு கடவுள வேண்டிக்கிறேன். என்னால என்னையே  நம்ப முடியல..., கடைசியா கேட்கறேன், இதெல்லாம் பொய் நான் உன்ன love பண்ணவே இல்லனு இப்போ கூட ஒரு வார்த்தை சொல்லு... I will forget everything..."

எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை... என் மனதில் இருந்த கடந்தகால எண்ணங்கள் அவளுக்கு எப்படி தெரிந்தது என்றும் புரியவில்லை...  எனவே நான் மௌனம் காத்தேன். 

"So, உன்னால அத மறுக்க முடியவில்லை. Thanks a lot... At least இப்போதாவது உண்மையா இருந்தியே! அதுக்கு..."

"தமிழ், நான் செஞ்சது தப்பு தான்... நான் உன்ன லவ்..... உண்மை... ஆனா ....." என என் நாக்கு குழற...

"Stop it Vetri...அவள் கண்ணீருடன்  "உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் வெற்றி... இப்போ கூட நான் love பண்றது தப்புனு சொல்லல... Friendன்ற பேர்ல நீ ஏமாத்தினதும், I am sorry நான் ஏமாந்ததும்,  உன்ன போய் Genuineனு நம்பியதும் என்னால ஜீரணிக்க முடியல... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நான் lifeல இப்போ இருக்கிற  stageல எனக்கு love தேவையில்லை...so நீயும் தேவையில்லை...


"Get out from my life" கடைசியாக அவள் கூறிய வார்த்தைகள் என் காதிலும், மனதிலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது...

எங்கே தவறு நிகழ்ந்தது? 
எப்படி தெரிந்தது என் (கடந்த கால) காதல்?  எனக்கேதும் புரியவில்லை...

தொடரும்...

 

அடுத்த பகுதியை படிக்க

Comments

  1. Wow what a sentance formation.... I am really travelling along with them... That Girl's emotion words are naturally.

    ReplyDelete

Post a Comment