முந்தைய பகுதிகளை படிக்க
பைகளே நமது வாழ்வின் சுமைதாங்கி!
முதலில் புத்தகங்களையும், பிறகு பொருட்களையும்
சுமக்கும் அவை ஒருபோதும் சோர்ந்து விடுவதில்லை...
அவனை சந்தித்த பின் அவளையும் சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு வந்த நான். அவன் கொடுத்த பேரதிர்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாகி போனேன். மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை... அங்கிருந்து நேராகக் கிளம்பி வெளியே வந்தேன், அவளை சந்திக்காமலேயே.... எங்கு செல்வது என்று தெரியவில்லை. சிறிது யோசனைக்குப் பின் கல்லூரியின் கேன்டீனை நோக்கி நடந்தேன்...
கேன்டீனில் கூட்டம் ஏதும் இல்லை. இங்குதான் முன்பெல்லாம் நாங்கள் இருவரும் எங்கள் உணவு இடைவேளையின் போது சந்திப்பது வழக்கம். அப்போதெல்லாம் பற்பல கதைகள் பேசி சிரித்துள்ளோம்... அந்த இனிய நினைவுகளை எல்லாம் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. இப்போதோ நான் மட்டும் இங்கு தனி மரமாக நிற்கின்றேன். வெற்று நினைவுகளுடன்... இனி என்ன செய்ய போகிறேன் என்ற சிந்தனையுடன்...
மனதில் மீண்டும் ஒரு பெரும் போராட்டம். வழக்கம்போல் அவள் தரப்பு நினைவொன்று இதில் அவளது தவறு ஏதுமில்லை, எனவே அவளை சந்தித்து பேசு என வாதிட்டது. என் தரப்பு நினைவோ காலம் கடந்து விட்டது எனவே இனி பேசிப் பயனில்லை... முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். அவளை தொல்லை செய்ய வேண்டாம் என எதிர்வாதம் செய்தது. அறிவு என்னும் நீதிபதியால் தீர்வு எதுவும் வழங்க முடியவில்லை. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தலைவலி தான் உண்டானது. வழக்கமாக எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்றபோதிலும். இன்று ஏற்பட்ட தலைவலியை போக்க எண்ணி ஒரு காபி குடிக்க எண்ணினேன்...
"அண்ணா, ஒரு காபி" என நான் கூற...
"அண்ணா, ரெண்டு காபியா போட்டுடுங்க" எனக்கு மிகவும் பரிச்சயமான அந்த குரல் என் பின்னே ஒலித்தது...
ஆம்! அவள்... அவள்... அவளேதான்....
அவளை கண்டதும் பேச வார்த்தைகள் ஏதுமின்றி நேராகச் சென்று என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்... நான் ஆர்டர் செய்த காபியை கூட வாங்காமலேயே... அவளோ எனக்கும் சேர்த்து இரண்டு காபியை வாங்கிக்கொண்டு எனது டேபிளில் வந்து அமர்ந்தாள்.
என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளாய்...
" என்ன வெற்றி, என்கிட்ட சொல்லாமலேயே போயிடலாம்னு நெனச்சியா?
"_________" மௌனம் மட்டுமே என்னிடத்தில்...
"I am really sorry Vetri... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு..."
"_________"
"என்ன நடந்ததுன்னு நேத்து
அவன்
சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுது... உன்ன
பாக்கறதுக்காக உன் Classroom, Auditorium, Canteen, Verandaனு college fullஆ தேடினேன். அப்புறம்தான் நீ
வரல
என்றது
எனக்கு
புரிஞ்சுது..."
"_________"
"ப்ளீஸ்... என்கிட்ட பேசு வெற்றி..."
"_________"
"அன்னிக்கு பேனா எடுக்கறதுக்காக அப்பா என் பை (bag) ஐ எதேச்சையாக open பண்ணி இருக்காரு... அப்பதான் அந்த லெட்டரை பாத்து இருக்காரு... அப்பவும் அவர் எதுவும் கேட்கல.... அந்தப் ஹேண்ட் பேக்கை பார்த்த நான்தான், அது நீ கொடுத்தது அப்படின்னு சொன்னேன்.... ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்த லெட்டரை என் கையில கொடுத்துட்டுப் போயிட்டாரு... I am really sorry Vetri.... அது அவன் வச்சதுன்னு எனக்கு தெரியாது..."
"_________"
"அந்த லெட்டர்ல அவன் பேர் கூட இல்ல அதனால எனக்கு தெரியாமலே போயிடுச்சு... தயவு செஞ்சு என் கூட பேசு வெற்றி, please...."
"_________"
"நான் இவ்ளோ நாள் பேசாம இருந்ததுக்கு என்ன பழிவாங்கறியா? என் கூட பேச மாட்டியா???" அவள் கண்ணீர் மல்க கெஞ்சினாள்....
"_________" என்னிடத்தில் பேச வார்த்தைகள் ஏதுமில்லை....
"சரி வெற்றி, தப்பு என் பெயரில்தான்.... நான் அந்த லெட்டரை அன்னிக்கே உங்கிட்டே காமிச்சி இருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்கும்... நான்தான் அவசரப்பட்டு ஒரு கோபத்தில் கிழிச்சு போட்டுட்டேன்... அதுதான் நான் செஞ்ச முட்டாள்தனம்."
"_________"
"நான் அன்னைக்கு அவ்வளவு தூரம் கேட்டேனே... நீயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே... நீ என்ன லவ் பண்ணலன்னு...."
இதற்கு உண்மையிலேயே என்னிடம் பதில் இல்லை... மீண்டும் நினைவுகளின் சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டேன்...
"சரி வெற்றி, இது தான் நீ எனக்கு கொடுக்கற தண்டனைனு தெரிஞ்சுகிட்டேன்.... இனி நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்.... ஆனால் போறதுக்கு முன்னாடி கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்."
"I love you Vetri....."
என் காதில் கேட்டது நிஜமா???
இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது உண்மையிலேயே அவளிடமிருந்து தானா??? என என் எதிரில் அமர்ந்திருந்த அவள் முகத்தை நோக்கினேன்....
"உண்மைதான் வெற்றி... I love you... இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு உன் மேல இருக்கிற பரிதாபத்தில் சொல்ற வார்த்தைகள் இல்லை... ஆமா! உண்மையிலே என் மனசு உன்ன இப்ப love பண்ணுது... உன்ன பிரிஞ்சதுக்கு அப்புறம்தான் நான் அதை உணர்ந்தேன். நான் அதை இனிமே மறைக்க விரும்பல.... ஆனா அதுக்காக நீ என்னை ஏத்துக்கணும்னு அவசியமில்லை... உனக்கு என்ன தோணுதோ அத செய்.... அது உன் இஷ்டம்...." கொட்டித் தீர்த்து விட்டாள்....
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..... நான் தேடிச் சென்றபோது எனக்கு கிடைக்காத காதல்... நானே என் மனதில் குழிதோண்டிப் புதைத்த என் காதல்... இப்போது என் கண்ணெதிரே உள்ளது... அதை ஏற்றுக் கொள்வதா? அல்லது மறுப்பதா? என்று தெரியவில்லை... உண்மையில் இப்படி ஒருநிலை ஏற்படும் என நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை....
நான் அவளையே வெறித்தபடி மீண்டும் மௌனத்தை தொடர்ந்தேன்....
"ஓ அன்னைக்கு, படிப்பு, வேலை அப்புறம்தான் காதல், கல்யாணம்னு பேசிட்டு போனாளே அப்படி நினைக்கிறியா? இப்பவும் அப்படித்தான். I still want to follow all the steps in my life... But எல்லா stepலயும் நீயும் கூட இருக்கணும்ன்னு தோணுது... நான் சொன்ன வார்த்தைக்காக இவ்வளவு நாள் என்ன distrub பண்ணாத நீ, என் lifeல எப்பவும் எனக்கு துணையாக இருப்பேன்னு நம்புறேன். I don't want to miss you in my life..."
"_________"
"சரி வெற்றி, உன்னோட மௌனம் என்ன நீ ஏத்துக்க மாட்டேன்னு சொல்லாமல் சொல்லுது... இனியும் உன்னை தொந்தரவு பண்ண விரும்பல... I am sorry... Sorry for everything...." தன் இருக்கையை விட்டு எழுந்து கண்ணீருடன் கிளம்பினாள்...
இதன் மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை... என் மனதின் அடியில் புதைந்து கிடந்த அவ்வார்த்தை வெகுண்டெழுந்து என் மொழியின் வழியே வெளிப்பட்டது.
"I love you தமிழ்..."
தொடரும்...
அடுத்த பகுதி
Ennayya aachu kathai super ah poguthu
ReplyDeleteவாழ்த்துக்கள்