எகிப்தின் அற்புதங்கள்... 5. ராஜபோக வாழ்கை (Palace and Coptic museum)

  முந்தைய பகுதிகளை படிக்க...



5. ராஜபோக வாழ்கை (Palace and Coptic museum)


Prince Muhammed Ali Palace - தர்பார் அறை


17 செப்டம்பர் 2022

Khan el-Khalili Bazaar (கான் எல்-கலில் மார்க்கெட்)  

முந்தினம் மேற்கொண்ட எகிப்தின் பிரமிடுகள் மற்றும் நீண்ட நெடிய வரலாற்று பயணத்திற்கு பின், அந்த அற்புத நினைவுகளை அசை போட இன்று ஒரு நாள் ஓய்வெடுக்க எண்ணினாலும், உடன் வந்த தோழி அடுத்த வாரம் புறப்பட இருப்பதால் இன்றே கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருட்களை வாங்க திட்டமிட்டோம். கெய்ரோ மாநகரை பொறுத்தவரை வெளிநாட்டினர் பொருட்களை வாங்க சிறந்த இடம் எது என யாரை கேட்டாலும் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு கான்-எல்-கலில் (Khan el-Khalili) பஜாரை நோக்கியே கைகாட்டுகின்றனர்.  


Khan el-Khalili Bazaar


அத்தகைய சிறப்புமிக்க கடைவீதி நமது சென்னை ரங்கநாதன் தெரு போல் காட்சியளித்தது. அங்கு தனித்தனி தெருக்களில் பரிசுப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணிகள், நகைகள் என அனைத்தும் வாங்க எக்கச்சக்கமான கடைகள் உள்ளன ஆனால் நன்கு பேரம் பேச தெரிந்தால் மட்டுமே விலை கட்டுப்படியாகும். நல்லவேளையாக உடன் வந்த நண்பர் அக்கலையில் சிறந்தவராக இருந்ததால் தேவையான பொருட்களை எளிதாக வாங்க முடிந்தது (நன்றி திரு. சார்லஸ்). சிறிது நேர தேடலுக்கு பின் தேவையான பொருட்களை வாங்கி, ஒருவழியாக ஷாப்பிங் முடித்து, நமஸ்தே இந்தியன் உணவகத்தில் மதிய உணவு முடித்து அறைக்கு திரும்பினோம்.


23 செப்டம்பர் 2022 காலை 

Prince Muhammed Ali Palace (Al Manial Palace)


இன்று மாலை நைல் நதியில் கப்பல் பயணம் செல்ல இருப்பதால், காலை நேரத்தில் நமது நண்பர்கள் அனைவரும் தத்தமது அறைகளில் ஓய்வெடுக்க நான் மட்டும் தனியே புறப்பட்டு மெட்ரோ மூலம் El-Sayeda Zeinab நிலையத்தை அடைந்து, அங்கிருந்து நைல் நதியை கடந்து, அரை கிலோமீட்டர் தூரமுள்ள ரோஹடா (Rhoda) தீவில் உள்ள இளவரசர் முகமது அலி மாளிகைக்கு (Prince Mohamed Ali Palace) சென்றேன். அங்கு சென்ற பின்பே ராஜபோக வாழ்க்கை என்பதின் முழுமையான பொருளை அறிந்தேன்.


Prince Muhammed Ali Palace


19ம் நூற்றாண்டின் இறுதியில் இளவரசர் முகமது அலி அவர்களால் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட அரண்மனையின் உள்ளே ஒவ்வொரு அங்குலமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வரலாற்று மாணவி செல்வி. மரியம் அந்த அரண்மனையை இலவசமாக சுற்றி காட்டியதுடன், ஒவ்வொரு அறையையும், அதிலிருந்த பொருட்களையும் சிறப்பாக விளக்கினார் (நன்றி).  

கண்ணைக் கவரும் கலைநயம் மிக்க அந்த மாளிகையில், ஒவ்வொரு அறையும் எகிப்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உலகின் தலைசிறந்த பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையின் கூரையும், கதவுகளும், தரைவிரிப்புகளும், பிற அலங்கார பொருட்களும் ஒவ்வொரு விதமாய் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது. ஈரானிய தரைவிரிப்புகள், இந்தோனேசிய கடிகார கோபுரம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பை எடுத்துரைத்தது. ஒவ்வொரு மணிக்கும் ஒருவித ஒலி எழுப்பும் கடிகாரம், ஒருபுறம் மட்டுமே பார்க்கக்கூடிய ஜன்னல்கள், பலவண்ணங்களில் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என அனைத்தும் அற்புதமே… இதைத் தவிர 14 ஏக்கர் கொண்ட ஒரு அழகான தோட்டமும் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டாலும் அதில் பிரவேசிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மொத்தத்தில் நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்க தோன்றும் அருமையான அரண்மனை.  


அரண்மனையின் உள்ளே


    இது தவிர ராஜ தர்பார் மண்டபம், மக்கள் குறை தீர்க்கும் பகுதி, தினமும் இறைவனை தொழ மாளிகைக்குள்ளேயே தனி மசூதி,  அரசர் வேட்டையாடிய விலங்குகளின் அருங்காட்சியகம்,  தோட்டத்தில் அரசியுடன் தனிமையில் உணவருந்த கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட அறைகள் என மொத்தத்தில் ஒரு அரசரின் ராஜவாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைந்த அற்புத மாளிகை. அந்த அரண்மனையில் வாழ கொடுத்து வைக்கவிட்டாலும், வாசம் செய்ய வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தேன்.              

 

The Coptic Museum and The Hanging church 


Coptic museum


வார்த்தைகளால் விவரிக்க முடியாத இளவரசர் முகமது அலி அரண்மனையின் அற்புத அழகை கண்ணார கண்டபின் மெட்ரோ மூலம் Mar Girgis நிலையம் சென்று அதன் அருகில் உள்ள Coptic அருங்காட்சியகத்திற்கு சென்றேன். Coptic அருங்காட்சியகத்தின் வாயிலில் கி.மு. 664-525 காலகட்டத்தில் ரோமானியர்களால் கட்டப்பட்ட பாபிலோன் கோட்டை உள்ளது. பூமியில் புதைந்திருந்த இக்கோட்டை அகழப்பட்டு ஒரு பள்ளத்தில் காட்சி தருகிறது. 

Coptic என்பது எகிப்தின் பூர்வீக கிறிஸ்தவ சமூகத்தை குறிப்பிடுவது. பண்டைய மற்றும் இஸ்லாமிய எகிப்தின் இடைப்பட்ட காலத்தில் ஓங்கியிருந்த Coptic மக்கள் பயன்படுத்திய கலைப்பொருட்கள், ஆடைகள், ஓவியங்கள், சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற 15,000 பொருட்கள் உள்ளன. இது பழங்கால எகிப்திய, கிரேக்க, ரோமானிய மற்றும் ஒட்டோமான்(துருக்கி) மரபுகளின் கலவையாக உள்ளது.  எகிப்தின் கிருத்தவ வரலாற்றை அறிந்துக் கொள்ள ஒரு நல்ல இடம்.

Coptic அருங்காட்சியகத்தை கண்டுகளித்த பின் அருகிலிருந்த தொங்கும் தேவாலயம் (Hanging church) சென்றேன். பூமியில் புதைந்த பாபிலோன் கோட்டைக்கு மேலாக உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு காலத்தில் தொங்கும் தேவாலயம் என அழைக்கப்பட்டது, தற்போது மாடியில் அமைந்த தேவாலயமாக காட்சியளிக்கிறது. இது புனித கன்னிமேரிக்கு 3ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு தேவாலயம். ஐரோப்பிய பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தது.


மேலும் சில புகைப்படங்கள்


Khan el-Khalili Bazaar


கான்-எல்-கலில் (Khan el-Khalili) பஜார்



கான்-எல்-கலில் (Khan el-Khalili) பஜார்


வாசனை பொருட்கள் விற்பனைக்கு


Prince Muhammed Ali Palace



அரண்மனை வளாகம்


Prince Muhammed Ali



அலங்கார அறை


அற்புதமான அறைகள்


அற்புதமான அறைகள்


அரண்மனை படிக்கட்டுகள் 


அற்புதமான அறைகள்


அற்புதமான அறைகள்


நாற்காலி


உணவறை


ஓய்வறை


அற்புதமான அறைகள்


அற்புதமான அறைகள்


அற்புதமான அறைகள்


அற்புதமான அறைகள்


ஒரு அறையின் மேற்கூரை


ஒரு அறையின் மேற்கூரை


ஒரு அறையின் மேற்கூரை


ஒரு அறையின் மேற்கூரை


பலவண்ண ஒளிதரும் கண்ணாடிகள்


ஒருபுறம் மட்டும் பார்க்க கூடிய ஜன்னல்கள்


ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொரு ஓசை தரும் கடிகாரம்


மசூதியின் உள்ளே


அரண்மனை வளாகம்


கோபுரத்தின் மேலே உணவருந்தும் அறை


கடிகார கோபுரம்


அரண்மனை தோட்டம்



The Coptic Museum 


Coptic museum


பூமியில் புதைந்த பாபிலோன் கோட்டை


Coptic museum


Coptic museum நுழைவாயில் அருகே


சிற்பக்கலை


கல்லிலே கலைவண்ணம் 


உயர்ந்த ஆசனம்


கலைப்பொருட்கள்


இறைவடிவ ஓவியங்கள்


பழங்கால நூல்


கலைப்பொருட்கள்


இறை ஓவியங்கள்


பழங்கால பொருட்கள்



The Hanging Church


தொங்கும் தேவாலயம்


தேவாலயத்தின் உள்ளே


தேவாலயத்தின் உள்ளே


தேவாலய வளாகத்தில்


இளவரசர் முகமது அலியுடன்



அடுத்த பகுதி...


Comments