மலர் மாலை – 3. காய் / கனி / கீரை மலர்கள்

 மலர் மாலை – 3. காய் / கனி / கீரை மலர்கள்  


        இப்பூக்கள் மலர்ந்து உதிர்ந்து போகாமல், தம்மை தாமே தியாகம் செய்து பல்வேறு காய்கனிகளாக மாறி பிறர் பசி போக்குகின்றன. நாமும் இதை கடைபிடித்து பிறருக்கும் உதவுவோமாக...

    

வரையறுக்கப்பட்ட பொறுப்பு:

    நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டவும்.


புடலை பூ



பிற பெயர்கள்                      :        புடோல்
Common name                         :        Snake gourd, Serpent gourd,Chichinda, Padwal
Botanical name                         :        Trichosanthes cucumerina

கூடுதல் தகவல்                     
    ஆப்பிரிக்க நாடுகளில் விளைச்சல் குறைவாக இருக்கும் காலங்களில், சிவந்த புடலங்காய், தக்காளிக்கு மாற்றாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது


கத்தரி பூ


Common name                         :        Eggplant,  Aubergine, Brinjal 
Botanical name                         :        Solanum melongena 

கூடுதல் தகவல்                    
    இப்படித்தான் சமைக்கவேண்டும் என்றில்லாமல் எந்த விதத்திலும் நினைத்ததைப்போல் சமைக்கப்படக்கூடிய காய் ஆதலால் இதை 'காய்கறிகளின் அரசன்' என்பர். கத்தரிக்காய் பித்ததால் உண்டான கபத்தை நீக்கும்.


கண்டங்கத்தரி பூ


Common name                         :        Nightshade
Botanical name                         :        Solanum virginianum

கூடுதல் தகவல்                     
    இவற்றின் கிளை மற்றும் இலைகளில் முட்கள் காணப்படும். காயானது கத்தரிக்காய் போன்றும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இது இளம்பிள்ளை வாத நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை.

பரங்கி பூ 



பிற பெயர்கள்                      :            சர்க்கரை பூசணி, அரசாணிகாய்
Common name                         :            Pumpkin flower
Botanical name                         :            Cucurbita pepo

கூடுதல் தகவல்                             
    பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.


துரைப்புடலை பூ



பிற பெயர்கள்                      :        மொசுக்கட்டான், காட்டுக் கொடித்தோடை
Common name                         :        Passion Flower or Passion vines, Wild water lemon        
Botanical name                         :        Passiflora foetida

கூடுதல் தகவல்                     
இதனது பழம் உண்ணத்தக்கது. இலங்கையில் இதனை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.


பாகல் பூ


பிற பெயர்கள்                      :        பாகற்காய் பூ
Common name                         :        Bitter melon, Bitter gourd flower
Botanical name                         :        Momordica charantia

கூடுதல் தகவல்                     
    இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி போன்ற கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.. பாகற்காயில் உள்ள இரத்த‌ சர்க்கரையளவைக் குறைக்கும் தன்மை (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் ஏற்கப்பட்ட ஒரு உண்மையாகும். இதன் தாயகம் இந்தியா.  இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கொவ்வை பூ


Common name                         :        Ivy gourd, scarlet gourd, tindora and kowai fruit
Botanical name                         :        Coccinia grandis

கூடுதல் தகவல்                    
    இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையவை. இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.


பீர்க்கு பூ


பிற பெயர்கள்                     :        பீர்கங்காய் பூ, பீரம்
Common name                        :        Sponge gourd, Egyptian cucumber, Vietnamese luffa
Botanical name                        :        Luffa aegyptiaca

கூடுதல் தகவல்                    
    இதன் விதைகளில் இருந்து சமையல் எண்ணெயை எடுக்க இயலும். மீதமான புண்ணாக்கு முயல், மீன்கள் உணவாகவோ அல்லது உரமாக பயன்படுத்தலாம். முதிர்ந்த காயினுள் உள்ள நார்க்கூடு வீட்டில் தேய்ப்பு நாராக பயன்படுத்தப்படுகிறது.


சுண்டை பூ


Common name                         :        Turkey berry, Prickly nightshade, Shoo-shoo bush, 
                                                            Wild eggplant, pea eggplant, Pea aubergine
Botanical name                         :        Solanum torvum

கூடுதல் தகவல்                    
சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படுத்தும்.


அவரை பூ


பிற பெயர்கள்                      :        தட்டை மொச்சை பூ
Common name                         :        Broadbeans flower
Botanical name                         :        Vicia faba

கூடுதல் தகவல்                    
    இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிற அல்லது வெண்ணிற பூக்கள் மலரும்.


காராமணி பூ



Common name                         :        Cowpea
Botanical name                         :        Vigna unguiculata

கூடுதல் தகவல்                    
    இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.


வாழை பூ


பிற பெயர்கள்                      :        வான்பயிர், அம்பணம், அரம்பை, கதலி, பனசம்
Common name                         :        Banana Flower
Botanical name                         :        Musa acuminata

கூடுதல் தகவல்                    
    செந்தொழுவன் (செவ்வாழை), இரசக்கதிலி (ரசுதாளி), தேன் வாழை (கற்பூரவல்லி), ஏற்றன் பழம் (நேந்திரம்) போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப் பழங்களின் வேறு பெயர்களாகும்.


எலுமிச்சை பூ



Common name                         :        Lemon flower
Botanical name                         :        Citrus limon

கூடுதல் தகவல்                    
    எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதிக அளவு எலுமிச்சை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


எள் பூ


Common name                         :        Sesame flower
Botanical name                         :        Sesamum indicum

கூடுதல் தகவல்                    
    எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாவுப்பொருளும் உள்ளன. கறுப்பு எள்ளில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.


கொத்துப்பேரி (பிளம்) பூ


Common name                         :        Natal plum
Botanical name                         :        Carissa macrocarpa

கூடுதல் தகவல்                    
    இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலும் விளைகிறது.


மாதுளம் பூ



பிற பெயர்கள்                      :        மாதுளை பூ
Common name                         :         Pomegranate flower
Botanical name                         :    Punica granatum

கூடுதல் தகவல்                    
    பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தின் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது என ஒரு கருத்து உண்டு.


தேன்பழம் பூ



Common name                         :        Muntingia 
Botanical name                         :        Muntingia calabura

கூடுதல் தகவல்                    
    இளம் மஞ்சள் நிற பழங்களை விளைவிக்கின்றது. இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது.


பண்ணைக்கீரை பூ


பிற பெயர்கள்                      :        மசிலிக்கீரை பூ, மயில்கீரை பூ
Common name                         :        Plumed cockscomb or Silver cock's comb
Botanical name                         :        Celosia argentea

கூடுதல் தகவல்  
    இது மூலிகை வகையை சார்ந்த கீரையாகும். இதில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குழந்தைகளுக்கு வார ஒருமுறை கொடுத்தால் நல்லது.
பண்ணைக்கீரையானது குடல்புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்தும்.
                  

தரைக்கீரை பூ


பிற பெயர்கள்                      :          பருப்புக்கீரை, சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை, நாதரசன்க்கீரை, கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை

Common name                         :        Duck weed, Little hogweed, or Pursley, Chicken weed
Botanical name                         :        Portulaca oleracea

கூடுதல் தகவல்                    
       இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது


தூதுவளை பூ


பிற பெயர்கள்                      :        தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் 
Botanical name                         :        Solanum trilobatum

கூடுதல் தகவல்                    
    இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் கிராமங்களில்  பரவலாக இருக்கிறது.


பூளை பூ


பிற பெயர்கள்                      :        தேங்காய்ப்பூக் சிறுபீளை, பூளாப்பூ
Common name                         :        Mountain knotgrass
Botanical name                         :        Aerva lanata

கூடுதல் தகவல்                    
    பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் பொழுது சேர்க்கின்றனர்.


தடச்சி பூ


Common name                         :         Phalsa, Falsa 
Botanical name                         :        Grewia asiatica

கூடுதல் தகவல்    
இதன் பழங்கள் உண்ணத்தக்கது. அது  குளிர்ச்சியைத் தரும் தன்மையும், பசியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டுள்ளது.  
  • சீரண சக்தியை அதிகரிக்கிறது.
  • பழம் தாகத்தை தணிக்கும்.
  • உடல் எரிச்சலை குணப்படுத்தும்.
  • பித்த மயக்கத்தைப் போக்கும்.
  • வீக்கங்களைக் குணப்படுத்தும்.
  • இருதயம், இரத்தம் ஆகியவற்றில் உண்டாகும் கோளாறுகளை நீக்கும்.
  • தொண்டை நோய்களுக்கு இது நல்லது.
  • விக்கலை போக்கும்.
  • வயிற்றுப் போக்குக்கு நல்ல மருந்தாகும்.


ராஸ்பெர்ரி பூ



Common name                         :        Rubus ellipticus
Botanical name                         :        Golden evergreen raspberry, 
                                                           Golden Himalayan raspberry, 
                                                           Yellow Himalayan raspberry

கூடுதல் தகவல்                    
        இதன் பழம் இனிப்பானது. பறவைகள் மற்றும் யானைகளால் அதிகம் விரும்பப்படுகிறது. இதன் பட்டை, அதன் சாறு இருமல், காய்ச்சல், பெருங்குடல் மற்றும் தொண்டை புண் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. 



Elderberry flower



Common name                         :        Elderberry flower
Botanical name                         :        Sambucus nigra

கூடுதல் தகவல்                    
        இதன் பழத்தை பச்சையாக உண்ணுதல் லேசான விஷம் கொண்டது. அதனால் சமைத்தபின் ஜாம், ஜெல்லி, சட்னி மற்றும் சாஸ் ஆக உண்ணலாம். இதன் பழம் மது தயாரிக்கவும் உதவுகிறது.


வெண்டை பூ


பிற பெயர்கள்                      :        வெண்டி  பூ
Common name                         :        Okra, Okro, ochro, Lady's finger
Botanical name                         :        Abelmoschus esculentus

கூடுதல் தகவல்                    
        இதில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் A மற்றும் C, ஃபோலிக் அமிலம், சுண்ணாம்புச்சத்து, 
இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துகள் உள்ளன.


புளிச்சக்கீரை பூ


Common name                         :        Kenaf
Botanical name                         :        Hibiscus Surattensis

கூடுதல் தகவல்                    
        புளிச்சக்கீரை உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.
சருமப் பாதுகாப்பு, மலச்சிக்கல் நீர் கோர்த்தல் பிரச்சனை, ரத்த அழுத்தம், நாவில் சுவையின்மை, மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்ச கீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.


முருங்கை பூ




Common name                         :        Moringa, Drumstick flower
Botanical name                         :        Moringa oleifera

கூடுதல் தகவல்        
        இதன் இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான தாதுக்கள்,   வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, மற்றும் புரதம் போன்றவை கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.    இதன் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும்  மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாக செயல்படுகிறது.             


பாசிப்பயறு பூ 



பிற பெயர்கள்                      :         பச்சைப் பயறு, சிறுபயறு        
Common name                         :        Mung bean, Green gram,  Moong, Maash (Persian) 
Botanical name                         :        Vigna radiata

கூடுதல் தகவல்                    
        இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது

        இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், செரிமானம், சருமம்,  இதயம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. ஆரோக்கிய உடல் எடை குறைப்பிற்கும், கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.


பொன்னாங்கண்ணி  பூ


Common name                         :        Matikaduri (Assamese), Ponnanganni (Tamil), 
                                                           Ponnaganti aaku (Telugu), Honnagone ( Kannada), 
                                                           Mukunuwenna (Sinhala)

Botanical name                         :        Sessile joyweed, Dwarf copperleaf

கூடுதல் தகவல்                    
        இந்தக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. இது குளிர்ச்சியை தரவல்லது. இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும். வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.


முடக்கொத்தான் பூ






பிற பெயர்கள்                      :        கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், 
                                                   முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், 
                                                            உழிஞை, முடக்கறுத்தான்
Common name                         :        Balloon plant, Love in a puff
Botanical name                         :        Cardiospermum halicacabum

கூடுதல் தகவல்                    
        தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை செய்வார்கள்.  இதை ரசம் வைத்தும் குடிக்கலாம். கை, கால், மூட்டு வலிகயை குணப்படுத்த வல்லது.


மிளகாய் பூ


                                                          
Common name                         :       Chilli, Capsicum

Botanical name                         :       Capsicum frutescens

கூடுதல் தகவல்  
மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகள் உண்டு. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.  

இது ஜீரணத்தை ஊக்குவித்து உடலை வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.
  

தக்காளி பூ


பிற பெயர்கள்                      :        தக்காளி பூ
Common name                         :        Tomato
Botanical name                         :        Solanum lycopersicum

கூடுதல் தகவல்                    
தக்காளி ஊட்டச்சத்தின் கலவை என அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி6, சி, கே, ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது. இது இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் காக்கும். 






நன்றிகள் 

Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு.

Wikipedia, Google    -   பல்வேறு தகவல்களுக்கு.

அய்யா திரு.நாகராஜன் - பல்வேறு பூக்களை அடையாளம் காண உதவியதற்கு.

இறுதியாக  - இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து நலம் பெறுவோமாக... 


Comments

  1. Wow huge list. I never expect these count. Thanks for the information...

    ReplyDelete
  2. Really wonderful job anna.... Thank you for the wonderful information. Really happy. Excellent and amazing work.

    ReplyDelete
  3. Really interesting Vijay, awesome work 👍

    ReplyDelete

Post a Comment