முந்தைய பதிவினை பார்க்க / படிக்க...
ஹம்பி அனுபவங்களும் புகைப்படங்களும் - 2
6. விஜய விட்டலர் கோயில்
மதிய நேரத்தில் கதிரவனின் கதிர்கள் உச்சம் பெற்ற தருணத்தில் நாம் நுழைந்தது விஜய விட்டலர் கோயில். பராமரிப்பு பணியின் காரணமாக சாலை அடைக்கப்பட, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் விட்டலர் கோவிலை அடைய முடிந்தது. செல்லும் வழியின் வலப்புறம் பல இடிந்த மண்டபங்களும், ஒரு பிரம்மாண்ட குளமும் உள்ளது.
விஜய விட்டலர் ஆலயத்தின் முன்பு வலப்புறம் செல்லும் ஒரு சாலை ஒருகாலத்தில் மக்கள் நடமாட்டம் மிக்க பஜார் வீதியாக இருந்திருக்க கூடும். அந்த சாலை மற்றொரு சிவன் கோவிலை நோக்கிச் செல்கிறது. ஒரு காலத்தில் இறைவன் இருந்த அந்த இடத்தில் தற்போது வவ்வால்கள் வாசம் செய்கின்றன. கோவிலின் மண்டபங்கள் மேலும் இடிந்து விழாமல் இருக்க புதிதாய் கருங்கல் சுவர்கள் கட்டப்பட்டு முட்டு கொடுக்கப்படுகிறது.
அழகான, அற்புதமான விஜய விட்டலர் ஆலயத்தின் கருவறை மூலவர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டாலும் அங்கே எனது இதயத்தில் இருந்த இறைவனின் உருவம் அப்படியே பிரதிபலித்தது போல உணர்ந்தேன். அர்த்த மண்டபத்தில் குழந்தை கிருஷ்ணரின் விளையாடல்கள் வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் உள்ள கல்தேர் நமது 50 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு இசைகளை பொழியும் இசைத்தூண் மண்டபம் நடுவில் இடிந்து விழுந்து, தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
விஜய விட்டலர் ஆலயத்தின் பின்னே மலைகளின் நடுவே மாதங்கமலை மற்றும் அச்சுதராயர் ஆலயத்தை கடந்து விருபாட்சர் கோவிலுக்குச் செல்லும் வண்ணம் 2.3 கி.மீ தூர நடைபாதை ஒன்று உள்ளது. அதன் ஆரம்பத்தில் முக்கிய விழாக்களின் போது அரசர்கள் தங்கள் எடைக்கு ஈடான காணிக்கைகளை ஆலயத்திற்கு வழங்க தராசு இருந்த துலாபார மண்டபம் உள்ளது.
விட்டலர் ஆலய புஷ்கரணி
விட்டலர் ஆலய மண்டபம்
விட்டலர் ஆலய மண்டபம்
விட்டலர் ஆலய அர்த்த மண்டபத்தில்
7. ஒற்றைக்கல் நந்தி
ஒற்றைக்கல் நந்திக்கு சற்று முன்பாக இடப்புறமும், நந்தியை ஒட்டியே வலப்புறமும் இரு பாதைகள் செல்கின்றன. அதில் இடப்புற பாதை துங்கபத்ரா கரையோரமாக உள்ள கோதண்டராமர் கோயிலின் வழியே அச்சுதராயர் கோயில் வீதியை அடைகிறது. வலப்புற மலைப்பாதை ஒரு ஆஞ்சிநேயர் கோவில் வழியாக பயணித்து நேரடியாக அதே அச்சுதராயர் கோயிலை அடைகிறது.
8. அச்சுதராயர் ஆலயம்
அச்சுதராயர் கோயில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிற்காலத்தில் கட்டப்பட்ட ஒன்று. விஷ்ணு கோவிலான இது, கிருஷ்ண தேவராயருக்கு பின் ஆண்ட அச்சுதராயரால் கட்டப்பட்டதால் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அழிந்துபோன விஜயநகர எச்சங்களில் இதுவே அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கோயிலாக எனக்கு காட்சியளித்தது.
மாதங்க மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் எதிரே மிகப்பெரிய பஜார் வீதி ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்ததாக இருந்திருந்த அந்த வீதி, தற்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுவது மனதிற்கு சங்கடமாய் இருந்தது.
அச்சுதராயர் ஆலய கோபுரம்
8. மாதங்க மலை
என்னை கருவியாய் கொண்டு அந்த நகரின் வரலாற்றை எழுத அந்த இயற்கை அன்னையிடம் இங்கு வேண்டிக் கொண்டேன். அதற்குள் கண்ணெதிரே கதிரவன் விடைபெற, நாமும் எனது அறைக்கு திரும்பினோம், அடுத்த நாள் காலை பொழுதில் எஞ்சியிருக்கும் இடங்களை பார்க்கும் திட்டத்துடன்.
ஓர் இயற்கை காட்சி
ஓர் இயற்கை காட்சி
வீரபத்திரர் ஆலயத்தில் இருந்து
மாதங்க மலை மேல் மண்டபம்
சூரிய அஸ்தமன காட்சி
சூரிய அஸ்தமன காட்சி
சூரிய அஸ்தமன காட்சி
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவிடுங்கள்.
தொடரும்...
அடுத்த பதிவினை பார்க்க / படிக்க...
Why these temple were not maintaned
ReplyDeletePics were nice.more detailed....☺️
ReplyDelete