முந்தைய பகுதிகளை படிக்க...
- முன்னுரை, முதல் பயணம்
- குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்
- குடுமி சாமியின் தரிசனம், பாரத்வாஜ தீர்த்தம்
- மயூர தீர்த்தம், மகாலிங்க தரிசனம்
- தட்சிண காளி, பைரவ தீர்த்தம்
- சகஸ்ரலிங்க தீர்த்தம், ஹரஹர தீர்த்தம்
- ஆகாய லிங்க தரிசனம்
திருக்காளத்தி கிரிவலம்
திருக்காளத்தி மலையில் பிரவேசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, ஆகாய லிங்கத்தை தரிசித்து, இறைவனின் உண்மை உருவத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்த பின் திண்ணன் மனதில் சிறிதும் சலனம் ஏதுமின்றி நேராக தனது குடுமி சாமியிடம் வந்தடைந்தான். தனது உண்மை உருவை காண்பித்த அவருக்கு மனமார தனது நன்றியைத் தெரிவித்தான். அவர் எதிரே சம்மணமிட்டு, அவரையே உற்று நோக்கியவாறு இரவு முழுவதும் அப்படியே அமர்ந்திருந்தான். மறுநாள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருக்காளத்தியில் உள்ள ஞானஸ்கந்தரின்* ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஒளி ஒன்று, குடுமி சாமி சன்னதியை அடைந்து, அங்கு அமர்ந்திருந்த திண்ணனின் உடலில் நுழைந்து மறைந்தது.
ஆம்! தனது அருளால் பிறந்த திண்ணனுக்கு திருக்காளத்தியில் ஞானஸ்கந்தராக குடியிருக்கும் முருகப்பெருமான் ஞானத்தை வழங்கினார். அந்த ஒளி தன்னுள் பாய்ந்ததும் முதன் முறையாக பொன்முகலி ஆற்றில் கண்ட, மலையின் நிழலோடு தனது உருவம் கலந்து மறைந்த காட்சி அவன் கண்முன் மீண்டும் தோன்றியது. இறைவனுடன் இரண்டற கலப்பதே தனது பிறவிப் பயன் என்ற மெய்ஞானத்தை அவ்வொளி மூலம் திண்ணனுக்கு எடுத்துரைத்தது ஞான ஸ்தலமாகிய திருக்காளத்தி.
*இராமாவதாரத்தில் ராமருக்கு அவதார நோக்கத்தை எடுத்துரைத்த ஞானஸ்கந்தருக்கு தனி ஆலயம் ஒன்று திருக்காளத்தியில், திருக்காளத்திஸ்வரர் கோவிலிலிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவில், பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் திருக்காளத்திஸ்வரர் ஆலயத்தில் குடியிருக்கும் அம்பாளின் பெயர் ஞான பிரசராம்பிகை. இவர் பால ஞான பிரசராம்பிகையாக கோவிலின் வெளிப்பிரகாரத்திலும், ஞான பிரசராம்பிகையாக கோயிலுக்கு உள்ளேயும் காட்சியளிக்கிறார். இக்காரணங்களால் திருக்காளத்தி ஞான ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்காளத்தியில் குடுமி சாமியின் தரிசனம் கிடைத்த ஆறாம் தினம் அதிகாலை, மெய்ஞானத்தை உணர்ந்து திண்ணனாக இருந்து திண்ணனாராக மாறிய அவர், இப்புவி உலகின் கடைசி தினத்தில் தனது இறுதி விருப்பமாக தனது குடுமி சாமியின் உருவமான திருக்காளத்தி மலை முழுவதையும் இறுதியாக ஒருமுறை சுற்றிவர எண்ணினார்.
முதலில் திருக்காளத்தி மலையின் எதிரே இருந்த அம்மன் மலையைச் வலம் வந்த அவர், இவ்வளவு நாள் இரை தேடும் நோக்கோடு தான் சுற்றி வந்த திருக்காளத்தி மலையை இன்று இறை வடிவமாக கிரிவலம் செய்தார். வழியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் தீர்த்த ஸ்நானம் செய்தார். "கயிலை பாதி காளத்தி பாதி" என்றழைக்கப்படும் திருக்காளத்தியின், கிரிவல பாதையில் பாதி தூரம் வலம் வந்த பின் ராமபுரம் என்ற இடத்தில் உள்ள நீர்நிலையின் எதிரில் இறைவனும் இறைவியும் குடும்ப சமேதராய் ரிஷப வாகனத்தில் வந்து அவருக்கு காட்சியளித்து அருள் புரிந்தனர்.
* திருக்காளத்தியின் தென் திசையில், கிரிவலப்பாதையின் மறுமுனையில் உள்ள கலம் என்று அழைக்கப்படும் ராமபுரம் ஏரியின் எதிரே நடராஜர் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பாலவிநாயகர் மற்றும் பாலமுருகருடன் காட்சி தரும் சிவன்-பார்வதி உருவ சிலையை இன்றும் காணலாம்.
- அற்புத அனுபவங்களை தந்து இப்பதிவை எழுத வைத்த இறைவனுக்கு...
- திருக்காளத்தியின் மகிமையையும், அங்குள்ள தீர்த்தங்களின் பெருமையையும் எடுத்துரைத்து, இக்கதைக்கான கருவையும் வழங்கிய திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு.
- திருக்காளத்தி தீர்த்தங்களையும், ஆகாய மற்றும் மகா லிங்கங்களை நேரில் தரிசிக்க உதவிய காலஞ்சென்ற திரு. முனி மற்றும் சீனு அவர்களுக்கு.
- கண்ணப்பரை எனக்கு அறிமுகம் செய்த திரு. மாதவன் அண்ணா மற்றும் சத்ய சாயி சேவா சமிதிக்கு.
- திருக்காளத்தி தீர்த்தங்களின் பெருமையை பற்றிக் கூடுதல் தகவல் பெற உதவிய "ஸ்ரீ காளஹஸ்தி மகிமை" புத்தகத்தை எழுதிய திரு. பவனி சீதாராமையர் மற்றும் அதை தமிழில் மொழி பெயர்த்த திருமதி. பவனி வள்ளி சத்யம் அவர்களுக்கு.
- நான் படித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மற்றும் அதன் தமிழாசிரியர்களுக்கு...
- கூகுள், விக்கிபீடியா - பல்வேறு கூடுதல் தகவல்களுக்கு.
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு.
மிகவும் அருமையான பதிவு👌🏻👌🏻
ReplyDeleteசிறப்பான பதிவு
ReplyDeleteநன்றி அறியாத தகவலை தெளிவாக பதிவிட்டமைக்கு
மேலும் தொடர வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அருமை.....
ReplyDeleteSairam. We know only the story of Kannappa Nayanar's devotion. But the other information very valuable and divinity based. Wonderful and whole kalahasthi stories kept the Darshan of the temple before us. Thank you so much sairam.
ReplyDeleteஅருமை ...👍👍
ReplyDeleteReally super....
ReplyDelete