தொடர் பயண அனுபவங்கள் - பகுதி 1

பர்வதமலை மற்றும் சிறுமலை
    
    குழந்தை தாய்மடியை நோக்கி தவழ்வதை போல, நதிகள் கடலை நோக்கி ஓடுவதைப் போல, பக்தன் இறையை நாடிச் செல்வதைப் போல, பயணங்கள் மேற்கொள்வது ஒரு பயணிக்கு எப்போதுமே ஆனந்தத்தை அளிக்கும் ஒரு செயலாகும். அதிலும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும் போது (ஏற்கனவே சென்ற இடங்களாக இருந்தாலும் கூட), அவை அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித் தருபவையே...

    
           பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு பயணம் மட்டுமே என திட்டமிட்டு பயணம் மேற்கொள்பவன் நான். ஆனால் சற்று எதிர்பாராமல் தொடர்ந்து மூன்று வாரங்கள், நான்கு மலைகளுக்கு பயணங்கள் மேற்கொண்ட அனுபவங்களின் சுருக்கமும் புகைப்படங்களுமே இக்கட்டுரை...


பயணம் 1 - பர்வதமலை (16.09.23)




    கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் சென்று இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பரவச அனுபவங்களை அளித்தருவதில் மலைகளுக்கெல்லாம் மலை எனப் பொருள் தரும் பெயர் கொண்ட பர்வதமலைக்கு நிகர் இல்லை. அதிலும் திட்டமிடாமல் எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும் போது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது.

    வார நாளான வியாழன் அன்று வழக்கமான அலுவலக பணிகளில் மூழ்கியிருந்த போது ஒலித்த அலைபேசி மணியின் மூலம் அழைப்பு விடுத்தது பர்வதமலை. நண்பர்கள் மூவருடன் முதன் முறையாக பர்வதமலைக்கு செல்ல விரும்புவதாகவும், நானும் உடன் வந்தால் நன்றாக இருக்கும் என நண்பர் மணிகண்டன் அழைக்க, திட்டமிட்ட பணிகள் ஏதும் அந்த திருநாளில் இல்லாததால் பயணம் சாத்தியமானது.

    மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் நண்பரின் காரில் புறப்பட்டோம். GST சாலையில் நெரிசல் அதிகம் மற்றும் பூந்தமல்லி-ஆரணி சாலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக தடைகள் (Diversions) அதிகம் என்பதால் இரண்டிற்கும் இடைப்பட்ட காஞ்சிபுரம், வந்தவாசி, போளூர் வழியாக பயணம் செய்து அதிகாலை 3.30 மணி அளவில் அடிவாரத்தை அடைந்தோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு கீழ் திசையில் ஒரு ஓவியம் போட காட்சியளித்த செக்கச்சிவந்த வானம் அந்த நாளை சிறப்பாக துவங்க உதவியது.

     வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை என்னை நேரில் அங்கு வரவழைத்து அருள் புரியும் அந்த இறைவன் தந்த கூடுதல் வாய்ப்பு இது என்பதால் நண்பர்களுடன் உற்சாகமாக காலை 7.00 மணியளவில் மலையேற்றத்தை ஆரம்பித்தேன். மழைக்காலமான செப்டம்பர் இறுதியில் மேகங்கள் அலைகள் போல திரண்டு இருந்தாலும், முன்புறம் பர்வதமலை உச்சியும், பின்புறம் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலை காட்சியும் தெளிவாக நம் கண்களுக்கு புலப்பட்டது அதிசயமே... இரு மலைகளையும் தரிசித்தபடியே பயணத்தை தொடர்ந்தோம்.

       தற்போது தென்மாதிமங்கலம் தடத்தில் பாதி வழி வரை குடிநீர் வசதி செய்யப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். உடன் வந்த நண்பர் ஒருவருக்கு உடல்நிலை முடியாவிட்டாலும் தொடர்ந்து வந்தது அவரது மன உறுதியை எடுத்துரைத்தது. ஒரு வழியாக 11.30 மணி அளவில் உச்சியை அடைந்தோம். சனிக்கிழமை என்றாலும் அதிசயமாக கூட்டம் கட்டுக்குள் இருந்தததால் அந்த இறைவனுக்கு எங்கள் கையால் அபிஷேகம் செய்ய முடிந்தது.   
    
        வெற்றிகரமாக இறைவனை தரிசித்து, மௌனகுரு ஆசிரமத்தில் மதிய உணவு உண்டு, மலையிறங்கி, ஓய்வெடுத்து, அந்த மழைநாளில் சுகமான நினைவுகளுடன் சென்னையை அடைந்தோம்.


பர்வதமலை புகைப்படங்கள் 


அதிகாலையில் பர்வதமலை 


ஓர் இயற்கை காட்சி 


பர்வதமலை அடிவாரம்


ஓர் உயிரினம்


திருவண்ணாமலை தரிசனம் 


ஓங்கி உயர்ந்த மரமொன்று 


வளைந்து செல்லும் மரமொன்று


நன்னன் கோட்டை


உச்சியில் இருந்து


மௌனகுரு ஆசிரமம்


கடந்துவந்த பாதை


ஓர் இயற்கை காட்சி


ஓர் இயற்கை காட்சி


செங்குத்துப் பாறை


செல்லும் வழியில் இறை வடிவம்


ஓர் இயற்கை காட்சி


பர்வதமலை ஆலயம் 


நண்பர்களுடன் 




பயணம் 2 - திண்டுக்கல் 

சிறுமலை (25.09.2023)

    இந்த மூன்று பயணங்களில் திண்டுக்கல் பயணம் மட்டுமே நான் திட்டமிட்ட ஒன்று. கொடைக்கானல் பெருமாள்மலையில் உள்ள அருள்மிகு லஷ்மண பெருமாள் ஆலயத்தின் புரட்டாசி மாத பிரமோற்சவத்தின் இறுதிநாள் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டு 24.09.2023 ஞாயிற்றுகிழமை இரவு சென்னையில் இருந்து பாண்டியன் விரைவு வண்டி மூலம் புறப்பட்டோம்.  தீர்த்தவாரி மறுநாள்தான் (26.09.2023) என்பதால் இடைப்பட்ட ஒருநாளை  கழிக்க திண்டுக்கல்லின் தெற்கில் உள்ள சிறுமலைக்கு ஒரு சிறிய மற்றும் சிறப்பான பயணம் மேற்கொண்டோம். 

    உலகம் உயிர்ந்தெழும் அந்த அதிகாலை நேரத்தில் கீழ்வானில் கதிரவன் துள்ளியெழும் அழகை ரசித்துக்கொண்டே வாகனத்தில் சென்றது சிறப்பான அனுபவமாக இருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தில் (Watching tower) ஏறி, சில மணிதுளிகள் இயற்கையை ரசித்த பின் அங்கு அமைக்கப்பட்ட ஒரு செயற்கை நீரூற்றில் குளித்து முடித்து வெள்ளிமலை அடிவாரத்தில் உள்ள அகஸ்தியபுரம் ஆசிரமத்தை அடைந்தோம். அங்கிருந்து லிங்க வடிவில் காட்சியளித்த அந்த அற்புத மலையில் நுழைந்தோம்.

      பெயர்தான் சிறுமலை என்றாலும் இயற்கை மற்றும் இறை அனுபவங்களை அள்ளித்தருவதில் சற்றும் சளைத்ததல்ல என்பது போல் பல்வேறு இயற்கை காட்சிகளும், இறை உருவங்களும்  நிரம்பிய அம்மலையில் நின்றிருந்த ஒரு ஒற்றை நெடுமரம் தனது வாழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டது போல தோன்றியது. அப்போது அம்மலையை தழுவுவது போல வீசிச் சென்ற காற்று எங்கள் இதயத்தையும் வருடிச் சென்றது.  

       வெள்ளிமலையில் உச்சியில் ஏகாந்தமாய் குடியிருக்கும் உள்ள அந்த வெள்ளியாண்டவரை மனமாற தரிசித்த பின் அகஸ்தியர் ஆசிரமத்தில் தந்த உணவை வயிறார உண்டு எங்கள் அடுத்த இலக்கான கொடைக்கானல் பெருமாள்மலையை நோக்கி பயணப்பட்டோம் 


சிறுமலை புகைப்படங்கள் 


சிறுமலையில் சூரியோதயம்


சிறுமலை சிகரங்கள்


சிறுமலை பாதை


சிறுமலை சிகரங்கள்


சிறுமலை செயற்கை சிற்றருவி


வெள்ளிமலை சிகரம்


ஓர் இயற்கை காட்சி


ஓம் நமசிவாய


ஓம் நமசிவாய


ஓம் நமசிவாய


ஓர் இயற்கை காட்சி


ஒற்றை நெடுமரம் (சிறுகதை)


ஓர் இயற்கை காட்சி


சகோதர பாசம்


அழகிய மலரொன்று


அழகிய மலரொன்று


கள்ளிப்பூ


இறை வடிவங்கள்


வெள்ளிமலை ஆண்டவர்


தொடரும்... 

அடுத்த பகுதியை படிக்க 



Comments

  1. பருவதமலை பார்த்த அனுபவம்

    ReplyDelete
  2. நன்னன் கோட்டை கதை அரிய ஆவல்

    ReplyDelete
  3. எழுத்துகள் மட்டும் அல்ல, புகைப்படங்களும் ஆயிரம் கதை சொல்கின்றன

    ReplyDelete

Post a Comment