ஒற்றை நெடுமரம்

ஓங்கி உயர்ந்த மலையின் முகட்டில் நெடுநெடுவென வளர்ந்திருந்தேன். காற்று, மழை, வெயில் தாங்கி கம்பீரமாய் நின்றிருந்தேன். பகிர்ந்து கொள்ள அனுபவங்கள் இருந்தும் கேட்பார் யாருமின்றி தனித்திருந்தேன். 


காய்ந்து சாய்ந்திருந்தால் விறகாய் அடுப்பில் எரிந்திருப்பேன். சற்று தடித்திருந்தால் ஜடப் பொருளாய் வீட்டில் அமர்ந்திருப்பேன். ஆனால் இன்று பயன் ஏதும் இன்றி தனிமரமாய் நின்றிருந்தேன்.


இப்படியே என் வாழ்வு முடியுமோ என எண்ணிய தருணத்தில்,  ஒரு ரசிகனின் பார்வையில் சிக்கினேன். அவனின் அலைபேசியில் முகப்பு படமாய் மாறினேன்.


எனது பிறவிப் பயனை அடைந்தேன்...




பிற பதிவுகளை படிக்க...



Comments