பயணியின் பாதையில் (புகைப்படத் தொகுப்பு) - 1

   காலங்கள் பல மாறினாலும் மாறாதது நம் நினைவுகள் மட்டுமல்ல, நாம் எடுத்த புகைப்படங்களும் தான். ஆம்! நாம் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் ஆண்டுகள் பல கடந்தும் அன்று நடந்த இனிமையான நிகழ்வுகளை எல்லாம் நமக்கு காட்சியாய், கதையாய், கவிதையாய் சொல்லும் தன்மையுடையவை. 


    புகைப்படங்களே நாம் வாழ்ந்த வாழ்விற்கு சாட்சியாக இருக்கும் நமது மழலைகள் போன்றவை. ஒரு பயணி என்ற முறையில், எனது பயண வாழ்வில் நான் எடுத்த ஒவ்வொரு படமும் என் மனதிற்கு பிடித்தவையே.. அவற்றில் ஒரே சிலவற்றை மட்டும் உங்களுக்காக இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.  

இப்பதிவை பார்த்து, ரசித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

1. இயற்கையின் அதிசயமாய் ஒருகொடியில் இரு வண்ண மலர்கள்  
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல்   


2. கல்லிலே கலைவண்ணம் 
இடம் : கைலாசநாதர் ஆலயம், காஞ்சி  



3. வானமும் தொட்டுவிடும் தூரம்தான் 
இடம் : பிராங்பர்ட், ஜெர்மனி 



4. ஏற்றி வைத்த தீபம் 
இடம் : திருப்பதி காட்டுப்பகுதி 



5. மனதிற்கு மிகவும் பிடித்த இடமொன்று 
இடம் : பர்வதமலை 



6. புதிதாய் பூத்த புன்னகையை போன்ற மலர்
இடம் : பர்வதமலை 
  


7. இரும்பு பாலத்தில் எறும்பு போல ஊர்ந்து செல்லும் ரயில் 
இடம் : பாம்பன் பாலம் 



8. இயற்கையின் சரிவில் இதயத்தை தொலைத்த ஓரிடம் 
இடம் : தலைமலை, நாமக்கல்  




9. இறந்த உயிர்களின் வீடுகள் (ஓடுகள்) 
இடம் : செம்பரம்பாக்கம் 



10. அந்திப்பொழுதில் வெண்ணிற நீருக்கு தங்கமுலாம் பூசும் கதிரவன் 
இடம் : பரனூர் ஏரி, செங்கல்பட்டு 



11. மலைச்சரிவில் மனதை மயக்கும் கோவில் 
இடம் : செஞ்சி 
 


12. மண்ணில் முளைத்த நற்பயிர் இந்த நெற்பயிர்
இடம் : கடலாடி கிராமம், திருவண்ணாமலை   



13. மலைக்கோவிலின் தீப கொப்பரை 
இடம் : நைனாமலை, நாமக்கல்  



14. செந்நிற காட்டு அணில் 
இடம் : திருமலை, திருப்பதி  



15. மனதில் நின்ற கம்பீர ராஜகோபுரம் 
இடம் : உத்திரகோசமங்கை   



16. சாலையோர கொடியில் சாய்ந்து கிடக்கும் வண்ணத்துப்பூச்சி 
இடம் : திருப்பதி சாலை, ஊத்துக்கோட்டை   



17. பாதையை மரிக்கும் மரமொன்று 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 




18. காற்றில் அசைந்தாடும் நாணல் 
இடம் : திருக்காளத்தி கிரிவலப் பாதை  



19. வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என எண்ணிய தருணத்தில் தற்செயலாய் கண்ணில் பட்ட காட்சி
இடம் : கபிஸ்தலம் அருகே, கும்பகோணம்  



20. செந்நிற காட்டு ஓணான் 
இடம்: திருமலை, திருப்பதி



21. செக்கச்சிவந்த மாதுளை 
இடம் : திருமலை, திருப்பதி 



22. மரத்தில் முளைத்த லிங்கமாய் மேகம் 
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல்    



23. உதிர்ந்த இலைகள் நீரில் விழுந்தாலும் உயிர்கள் ஜனிப்பதில்லை.
இடம் : திருமலை காட்டுப்பகுதி

 
24. இலையற்று போயினும் களையற்று போகா இயற்கை 
இடம் : வெள்ளியங்கிரி 



25. உப்புபோல் சரிந்து பெருகும் நீர் 
இடம் : வைகை அணை 



26. நீர் பாய்ச்சாமல் வளர்ந்த காட்டில் ஒளி பாய்ச்சும் கதிரவன்
இடம் : சுருளி அருவி   



27. அந்தி சாயும் நேரத்தில் இயற்கையின் ஓவியம் 
இடம் : திருமலை வையாவூர், செங்கல்பட்டு  
 


28. மலையில் பட்டு சிதறிய வெண்பஞ்சு மேகங்கள்
இடம் :  பொதிகை மலை 



29. படித்து களைத்தாலும் புன்னகையை கைவிடா மாணவி
படத்தில் : வாஹினி   



30. பாலைநிலத்தை பாதுகாக்கும் பெண் தெய்வம் 
இடம் : கிசா பிரமிடு வளாகம், எகிப்து 
  

31. தெளிந்த நன்னீரில் வசிக்கும் உயிர்கள் 
இடம் : திருமலை காட்டுப்பகுதி  



32. இறைவனின் நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம் 
இடம் : திருவண்ணாமலை




33. முரட்டு தோல் கொண்ட ஒரு மரம்  
இடம் : புதுச்சேரி 



34. நீரில் மிதக்கும் மரம் போல நிழல் 
இடம் : வேடந்தாங்கல் 



35. மலைச்சரிவில் திராட்சை தோட்டம்,
இடம் : ருடிஷ்யம், ஜெர்மனி   



36. கதிரவனை வணங்கும் இளந்தளிர்கள் 
இடம் : செம்பரம்பாக்கம் 
படத்தில் : வாஹினி, சரண், கதிர்    



இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது? 
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.


நன்றிகள் 
  • இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு. 
  • இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு 
  • காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
  • இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு 
  • புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
  • இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.

அடுத்த பதிவை பார்வையிட

பிற பதிவுகளை பார்க்க / படிக்க 
ஒரு பயணியின் வழித்தடம் 

Comments