முந்தைய பகுதிகளை படிக்க
பெண்களின் மனதைப் போலவே
பைகளும் ரகசியமானவை.
அதில் என்ன உள்ளது என்பது யாருக்கும்
தெரியாது அதை திறந்து காட்டும் வரையில்...
நிச்சயமாக அவன் கொடுத்த சர்ப்ரைஸ் தான் அளப்பரியது. அதன் முன் நான் கொடுத்த சிறிய பரிசு எம்மாத்திரம்?! உடனடியாக அவளை சந்தித்து நன்றி தெரிவிக்க எண்ணி எங்கள் பைகளை என் இருக்கையில் வைத்துவிட்டு மேடையின் பின்னால் இருக்கும் அவளை நோக்கி புறப்பட்டேன்.
என்ன தான் விரைவாக சென்றாலும், ஆண்டுவிழா நாளான இன்று அனைத்து மாணவர்களையும் கடந்துச் சென்று மேடையில் அடைவது என்பது சற்று சிரமமாகவே இருந்தது. 100 மீட்டர் தொலைவைக் கடக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒருவழியாக தடைகள் பல தாண்டி மேடையின் பின்னால் சென்றபோது, அவள் அங்கு இல்லை. எங்கிருக்கிறாள் என்று தெரியாததால், ஒரு சிறிய ஏமாற்றத்தோடு மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறி வராண்டாவிற்கு வர, அங்கு அவள் எனக்காக காத்திருந்தாள். ஆடிட்டோரியத்தில் அத்தனை பேர் இருந்தும் இங்கு யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது ஆச்சரியமே... அவளைப் பார்த்த என் கண்களுக்கு, மீண்டும் தேவதையாக தோன்றினாள்...
அன்று நான் பார்த்த பார்வை வேறு...
இன்று கடவுளின் முன் நிற்கும் ஒரு சிறு பக்தன் போல் இருக்கிறேன். சாதாரண பக்தன் எப்படி தன் பிழைகள் எல்லாம் பொறுத்துக் கொண்டு இறைவன் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் அவள் முன்னால் நிற்கிறேன். அவளோ மெல்லிய புன்முறுவலுடன் எதிரில் இருக்கிறாள். இறைவனுக்கும் இவளுக்கும் ஒரு வித்தியாசம்தான். அவரோ அனைத்தையும் அறிவார்! இவளோ எனது பாவங்கள் ஏதும் அறியாள்...
நல்லது! தெரியாதது தெரியாமலேயே போகட்டும். நம் கையில் உள்ள இந்த தருணம் மட்டுமே நிஜம். அந்த நிஜத்திற்கு உயிருள்ளவரை உண்மையாக இருக்கவேண்டும் என்றெல்லாம் என் மனம் எண்ணிக் கொண்டிருக்க, "How was my poem?" என அவள் கேட்ட வார்த்தைகள் நிழலுலகிற்கு மீட்டு வந்தது. அவள் கண்களில் ஏதோ புன்னகை மின்ன, என் கண்களிலோ விழி நீர் அரும்பியது...
"Don't feel too much Vetri" என என் எண்ண ஓட்டங்களை அறியாமலேயே அவள் என்னை தேற்றினாள். ஆண்டு விழா முடிந்ததும் வழக்கம் போல வீடு திரும்பும் வழியில் என்றும் இல்லாத அதிசயமாக இன்று இருவருக்கும் ஒரே சீட்டில் இடம் கிடைத்தது. பேருந்தில் அவள் நிறைய நிறைய பேசினாள். நான் பேச வார்த்தைகளின்றி தவித்தேன். அவளிடம் கேட்க எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருந்தது. "என்னை ஏன் அவளுக்கு மிகவும் பிடிக்கும்?" என்பதே. உள்ளத்தில் உள்ள கள்ளம் நீங்கியதால் அதை நேரடியாக அவளிடம் கேட்டுவிட்டேன்.
"I like your genuineness" என்றவள் மேலும் தொடர்ந்து "You know Vetri, படிக்கிற வயசுல எங்க அப்பா-அம்மா love பண்ணி சரியான வேலை கிடைக்கும் முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதனால வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஆனா, அந்த கஷ்டத்தையும், அவங்க இஷ்டத்தையும் ஒரு முறைக் கூட என் மேல திணிச்சதில்ல... குறிப்பா என் அப்பா எனக்கு, எனக்கான விஷயங்களை நானே தேர்ந்தெடுத்துக்கிற அளவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்காரு. He is my role model. அவரு எனக்கு பண்ண அட்வைஸ் ஒன்னே ஒன்னுதான். Lifeல பல steps இருக்கு. முதல்ல படிப்பு. அப்புறம் வேலை, அப்புறம் தான் காதல், then கல்யாணம்னு. So if you want to enjoy your life, Don't skip any steps னு அடிக்கடி சொல்வார். So I feel that I am in an important step of my life. அதுக்காக நான் love பண்றது தப்புன்னு சொல்ல வரல. அது அவங்கவங்க இஷ்டம். But I don't want to skip any steps in my life... So எனக்கு என் கையில இருக்கிற இந்த நொடி தான் important..."
"இந்த important step ல கிடைச்ச ஒரு நல்ல நண்பன் நீ. நீ செஞ்ச உதவியால தான் நான் first year exam pass பண்ணேன். அது உன் மேல எனக்கு ஒரு நல்ல impression create ஆச்சு. அதுக்கப்புறம் நம்ம நல்லா பேசி பழக ஆரம்பித்து இவ்வளவு நாள்ல நீ இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட தப்பா எதுவும் பேசல. இனியும் பேசுவனு நினைக்கல.. குறிப்பா வேற யாராவது இருந்தா கொஞ்ச நாளில் love அப்படி இப்படினு ஆரம்பிச்சுருப்பாங்க. நீ அப்படி இல்ல வெற்றி.. நீ, நீயாகவே இருக்க. You are the most genuine person I know after my father. So I like you very much" என்றாள்.
எனக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது... அவள் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் உயர்வான எண்ணத்திற்கு நிச்சயம் நான் தகுதியானவன் இல்லை என்ற குற்ற உணர்ச்சி என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. ஆனால் அவள் சொல்வது போல் நம் கையில் இருக்கும் இந்த நொடி தான் முக்கியம். அதற்கு உண்மையாக இருக்க முயற்சிக்க வேண்டும் என எண்ணினேன். அதன்பின் நான் எதுவும் கேட்கவில்லை. நான் சிறிது நேரம் இப்படியே எண்ணிக் கொண்டிருக்க அங்கு நிலவிய மௌனத்தை மீண்டும் அவளே கலைத்தாள்.
"Where is my birthday gift?" என கேட்டவளிடம், என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அவள் என் மீது வைத்திருக்கும் பேரன்பிற்கு எப்படி சிறிய பை (Hand bag) ஈடாகும் என நான் தயங்கினேன்... அவள் மீண்டும் மீண்டும் கேட்க வேறு வழியின்றி அதை அவளது பையில் (Bag) வைத்திருப்பதாக கூறினேன். அதை கேட்ட அவள் அகம் மகிழ்ந்தது முகத்தில் பிரதிபலித்தது. "என்னோட இந்த birthday something special. நீ கொடுத்த பரிசை நாளைக்கு தான் open பண்ணி பாக்க போறேன். எனக்கு இன்னொரு gift வேணும் வெற்றி, You should come to my home tomorrow evening and meet my father" என கேட்டவளிடம் மறுத்து கூற என்னிடம் வார்த்தைகள் ஏதும் இல்லை...
தொடரும்...
அடுத்த பகுதியை படிக்க
Its nice very interesting
ReplyDeleteIdhayam padam Murali unka friendo.... Summa
ReplyDeleteBabu
Very nice sir
ReplyDeleteSteps of Life, super explanation....
ReplyDelete