திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் அருள்மிகு கைலாசநாதர் கோவிலும், மலைமேல் இறைவனும் இறைவியும் ஒருங்கிணைந்த கோலமாக காட்சி அளிக்கும் அர்த்தநாதீஸ்வர் கோவிலும் உள்ளது. 1200 படிகள் கொண்ட இம்மலைமேல் ஏற பேருந்து வசதியும் உள்ளது. அதிகாலை வெயிலுக்கு முன்பு சென்றால், அர்த்தநாதீஸ்வரர் கோவிலின் பின் உள்ள உச்சிக்கு சென்று அம்மை-அப்பருடன் இருக்கும் உச்சி பிள்ளையாரையும் தரிசனம் செய்யலாம்.
உச்சி கோவிலுக்கு செல்லும் வழியில் சுனையும், பல அழகான பாறைகளும், பாறையில் செதுக்கப்பட்ட வேலனின் உருவத்தையும் காணலாம். நாமக்கல்லில் இருந்து 35 கிலோமீட்டர் தூரமுள்ள இவ்விடம் குடும்பத்துடன் சென்று இறை மற்றும் இயற்கையை தரிசனம் செய்ய சரியான தேர்வாகும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு - இங்கே சொடுக்கவும்
திருச்செங்கோடு மலையில் எடுக்கப்பட்ட புகைபடம்கள் இதோ உங்களுக்காக... அடிவாரக் கோவில் (பின்புறம் மலை)
அர்த்தநாதீஸ்வரர் (மலை) கோவில்
மலையிலிருந்து ஒரு பார்வை
உச்சி கோவிலுக்கு செல்லும் வழி
நாமக்கல் கோட்டை
நாமக்கல் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரே (சாளக்கிராம) கல்லிலான மலை அந்நகரத்திற்கு அழகு சேர்கிறது. மலையின் கிழக்கு திசையில் அரங்கநாதர் ஆலயமும், மேற்கு திசையில் நரசிம்மர் ஆலயமும் குடைவரை கோவில்களாக அமைந்துள்ளது. இக்கோவில்களில் மூலவர் சன்னிதியின் உற்புற சுவற்றில் உள்ள சிற்பங்கள் கலைநயம் மிக்கவை. நரசிம்மர் ஆலயத்திற்க்கு ஏதிர்ப்புறம் உள்ள சாலையில் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் மலையை வணங்கியபடி தரிசனம் அளிக்கிறார்.
மலைக்குமேல் கோட்டையின் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள் இல்லாத ஒரு சிறிய கோவிலும் அமைந்துள்ளது.


மலைமேல்


- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi 3S மற்றும்7S க்கு...
- பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
பிற பதிவுகளை படிக்க...
உள்ளடக்கம் - ஒரு பயணியின் வழித்தடம்
Photos taken by you? Nice
ReplyDeleteSanath kumar balan