நாமக்கல் அருகிலுள்ள நைனாமலையில் வரதராஜ பெருமாள் குடிகொண்டிருக்கிறார். நயன மகரிஷி என்பவர் இங்கு இறைவனுக்கு கைங்கரியம் செய்து வழிபட்டு முக்தி அடைந்ததால் நைனாமலை என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். சுமார் 3800 படிகள் கொண்ட இம்மலை மே மாதத்திலும் காலை நேரத்தில் பனியால் சூழப்பட்டு அற்புதமாய் காட்சியளித்தது. மலையில் இருந்து பார்க்கும்போது சுற்றுப்புறங்களில் உள்ள இயற்கை காட்சி கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் சென்று இயற்கையையும், இறைவனையும் தரிசிக்க மிகச்சிறந்த ஒரு இடம்.
எனது நைனாமலை பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...
மலையின் தோற்றம்
அடிவாரம்
மலைப்பாதை
மலைக்கோவில்
கோவில் மற்றும் சன்னிதிகள்
மலைமேலிருந்து ஒரு பார்வை
மேலும் சில புகைப்படங்கள்
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi3S க்கு...
- உடன் பயணித்த எனது குடும்பத்தாருக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
Useful information and all photos awasome. Thank you very much 👏👏👏👍
ReplyDelete