ஒரு பன்னிக்குட்டியின் கதை

முன்குறிப்பு: இது குழந்தைகளுக்கான சிறுகதை (பெரியவர்களும் படிக்கலாம்)



        ஒரு ஊர்ல ஒரு பன்னிக்குட்டி இருந்துச்சு. அதுக்கு கூட விளையாட ஆள் இல்லாம தனியா இருந்துச்சு. அதனால ரொம்ப போர் அடிச்சது. அதனால யார் கூடயாவது சேர்ந்து விளையாடலாம்னு தோணுச்சு. விளையாட ஆள் தேடி அது போச்சு. போற வழியில ஒரு நாய்க்குட்டிய மீட் பண்ணிச்சு. 

"நாய்க்குட்டி! நாய்க்குட்டி! அழகான நாய்க்குட்டி; என் கூட நீ விளையாட வருவியா?" என பன்னிக்குட்டி பாசமா கேட்டுச்சு. 

அதுக்கு அந்த நாய்க்குட்டி "உன் கூட விளையாட நான் ரெடி, ஆனா நீயும் என்ன மாதிரியே  நன்றியோட இருப்பியா? அப்படின்னு கேட்டுச்சு. 

அதுக்கு நம்ம பன்னிக்குட்டி "சாரி என்னால அதெல்லாம் முடியாது. நான் வேற யார் கூடயாவது விளையாடுறேன்" அப்படின்னு சொல்லிட்டு போய்டுச்சு.

‌அடுத்ததா நம்ம பன்னிக்குட்டி ஒரு காக்காவ மீட் பண்ணச்சி,  "காக்கா! காக்கா! கருப்பான காக்கா! நம்ம ரெண்டு பேரும் ஜாலியா விளையாடலாமா?"  அப்படின்னு ஆவலா கேட்டுச்சு.

அதுக்கு அந்த காக்கா, "ஓகே! நான் ரெடி. நீயும் என்ன மாதிரி கிடைக்கிற சாப்பாட்ட எல்லார் கூடவும் ஷேர் பண்ணிக்க ரெடியா?" அப்படின்னு கேட்டுச்சு.

அதுக்கு நம்ம பன்னிக்குட்டி, "சாரி என்னால அதெல்லாம் முடியாது. நான் வேற யார் கூடயாவது விளையாடுறேன்" அப்படின்னு சொல்லிட்டு போய்டுச்சு.

அடுத்ததா நம்ம பன்னிக்குட்டி ஒரு பூனையை மீட் பண்ணுச்சு "ஹலோ பூனை,  புசு புசு பூனை, நீ என் கூட விளையாட வரியா" அப்படின்னு ஃபிரண்ட்லியா கேட்டுச்சு.

அதுக்கு அந்த பூனை, "சரி வா விளையாடலாம் ஆனா நான் வீட்டை சுத்தி சுத்தி தான் விளையாடுவேன். அதுக்கு ஓகே வா" அப்படின்னு கேட்டுச்சு.

அதுக்கு நம்ம பன்னிக்குட்டி "அதெல்லாம் முடியாது. நான் உங்க கூட விளையாட வரல" அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து வந்துடுச்சு‌.

போற வழியில அடுத்ததா நம்ம பன்னிக்குட்டி ஒரு கழுதைய மீட் பண்ணுச்சு. வழக்கம் போல அதுகிட்ட "கழுதையே! கழுதையே! நீயாவது என் கூட விளையாட வருவியா?" அப்படின்னு கெஞ்சி கேட்டுச்சு.

அதுக்கு அந்த கழுதை, "சரி ஓகே,  ஆனா நீயும் என் கூட சேர்ந்து மூட்டை தூக்குவியா? அப்படின்னு கேட்டுச்சு‌.

உடனே நம்ம பன்னிக்குட்டி "சாரி அதெல்லாம் என்னால முடியாது. நான் வேற ஆள பாத்துகிறேன்" அப்படின்னு சொல்லிட்டு கோபமா  வந்துடுச்சு.

அடுத்ததா நம்ம பன்னிக்குட்டி ஒரு பசுமாட்ட மீட் பண்ணுச்சு "பசுவே! பசுவே!  வெள்ள வெள்ள பசுவே! நீயாவது என் கூட விளையாட வருவியா" அப்படின்னு பணிவா கேட்டுச்சு.

அதுக்கு அந்த பசு, "நீயும் என்ன மாதிரி எல்லாருக்கும் பால் கொடுப்பியா?" அப்படின்னு கேட்டுச்சு.

அதுக்கு நம்ம பன்னிக்குட்டி, "அதெல்லாம் என்னால முடியாது" அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து வந்துடுச்சு

அடுத்ததா நம்ம பன்னிக்குட்டி ஒரு சேவலை மீட் பண்ணுச்சு. "சேவலே! சேவலே! கொண்ட வச்ச சேவலே, நீயாவது என் கூட விளையாட வருவியா?" அப்படின்னு அன்பா கேட்டுச்சு.

அதுக்கு அந்த சேவல், "சரி நான் ரெடி, ஆனா நீயும் என்ன மாதிரி தினமும் காலையில சீக்கிரம் எழுந்து எல்லாரையும் எழுப்புவியா?" அப்படின்னு கேட்டுச்சு

அதுக்கு நம்ம பன்னிக்குட்டி "சாரி, அதெல்லாம் என்னால முடியாது நான் லேட்டாதான் எழுந்துக்குவேன்" அப்படின்னு சொல்லுச்சு. 

அதுக்கு அந்த சேவல், "அப்ப நான் உன் கூட விளையாட வர மாட்டேன்" அப்படின்னு சொல்லிட்டு போயிடுச்சு. யாரும் விளையாட வராததால, நம்ம பன்னிக்குட்டி செம கடுப்பா ஆயிடுச்சி. சோகமா போயி ஒரு ஓரமா படுத்துகிச்சி. 




அப்ப அந்த வழியா ஒரு எருமைமாடு வந்துச்சி. அது நம்ம பன்னிக்குட்டியை பார்த்து "ஏன் சோகமா இருக்க?" அப்படின்னு  கேட்டுச்சு.

"என்கூட யாரும் விளையாட வர மாட்டேங்கிறாங்க" அப்படின்னு நம்ம பன்னிக்குட்டி சோகமா சொல்லிச்சு.

அதுக்கு அந்த எருமை மாடு,  "கவலைப்படாதே! நான் ஒரு விளையாட்ட சொல்லித்தரேன். அத நீ தனியாவே விளையாடலாம்." அப்படின்னு சொல்லுச்சு. அப்படியே சேத்துல விளையாட நல்லா சொல்லி குடுத்துச்சி.


அதுக்கு நம்ம பன்னிக்குட்டி ரொம்ப சந்தோஷமா, "சரி ஓகே! ரொம்ப தேங்க்ஸ், நானும் இனிமேல் உன்ன மாதிரியே சேத்துல விளையாடுறேன்" அப்படின்னு சொல்லிட்டு ஜாலியா சேற்றில் இறங்கி உருண்டு புரண்டு விளையாட ஆரம்பிச்சது. அதுக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சு போச்சு. 

அன்னிக்கு ஆரம்பிச்ச அந்த பழக்கம் தான் இன்னிவரைக்கும் பன்னியால சேத்துல விளையாடாமல் இருக்க முடியல... அதனால அது மேல அடிக்கிற நாத்தத்தால வேற யாரும் அதுக்கு அப்புறம் அதுகூட விளையாட தயாரா இல்ல...


நீதி: நாம் பிறரிடமிருந்து எதை கற்றுக் கொள்கிறோமோ, அதுவே நம் வாழ்வை தீர்மானிக்கிறது


Comments

Post a Comment