பயணங்கள் தொடரட்டும் - முன்னுரை


பயணங்கள் தொடரட்டும்.....


அனுபவங்களே ஒரு மனிதனை பரிபூரணமாக்குபவை. அத்தகைய அனுபவங்களை பெற பயணங்கள் நமக்கு துணை புரிகின்றன. அகப்பயணம் நம்மை நாம் அறிவதற்கும், புறப்பயணம் நம் உலகை நாம் அறிவதற்கும் உதவுகின்றன. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு பயணமே நமது வாழ்க்கை. அதில் நாம் எவ்வாறு பயணம் செய்கிறோம் என்பதே நாம் விட்டு செல்லும் தடம்.

 எதை நோக்கியும் செல்லாமல் எனை நோக்கி செல்வது என்பது சித்தர் வழி ஆனால் சாதாரண மனிதனுக்கு தனது பயணத்தை மேற்கொள்ள இலக்கு அவசியமாகிறது. அந்த இலக்கை பொறுத்தே நமது பயண பாதை அமைகிறது. உதாரணமாக, பணத்தை நோக்கி நாம் செல்லும் பயணம் மனித உணர்வுகளை புறந்தள்ளும். அதே நேரத்தில் நம் வறுமையை போக்க நாம் செல்லும் உழைப்பு என்னும் பயணம் நம் உடலையும், மனதையும் உறுதியாக்கும். 

 பயணத்திற்கு இலக்குகள் அவசியமே ஆனால் அதைவிட நாம் தேர்ந்தெடுக்கும் பாதையும், அதில் நாம் சந்திக்கும் அனுபவங்களும் நம்மை அந்த இலக்கை அடைய கூடிய தகுதியை வளர்க்க உதவுகின்றன. தவறான பாதையில் செல்லும் போது நாம் நம் இலக்கை அடைந்தால் கூட அதில் மகிழ்ச்சி இருக்காது. அதே நேரத்தில் நாம் சரியான பாதையில் சென்றால், ஒருவேளை நாம் அந்த இலக்கை அடைய முடியாவிட்டாலும் கூட, அவ்வனுபவங்கள் நமக்கு நம்மையும், நம் உலகையும் அறிய உதவுகின்றன. இதையே கௌதம புத்தர்  "இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பாக அமைவதே மேல்" என்கிறார்.

எனது பயண பாதையை பதிவு செய்வதே இவ்வலைப்பூவின் நோக்கம்.

பயணங்கள் தொடரட்டும்.....


உள்ளடக்கம் - ஒரு பயணியின் வழித்தடம்

Comments

  1. 👏👏👏👏Great!! My best wishes Vijy☺

    ReplyDelete
  2. Nice continue ur writing all the best.

    ReplyDelete
  3. Really amazing anna.... Congratulations!!! Expecting alot from you .... Keep going

    ReplyDelete
  4. Ninaipathai seyvathai Vida ninaithapadi seyvathai siranthathu ...... Vazhthukkal

    ReplyDelete
  5. Looks like a Kondrangi hill very nice experience

    ReplyDelete
  6. Super Vijay Bhaskar....Pls keep up the good work.

    Your talent ,commitment and passion as a responsible trekker and spirutual seeker is admirable. This is a good platform to share with like minded people.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் விஜய்

    ReplyDelete
  8. சிறப்பு துவக்கம்.. வாழ்த்துக்கள் விஜய்..

    ReplyDelete
  9. Hi Vijay anna.. I'm Ramesh.. all the very best.. and thank u so much for this very good initiative....

    ReplyDelete
  10. சிறந்த துவக்கம்... அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  11. Superb anna 🎉👍😍 congratulations 🥰

    ReplyDelete

Post a Comment