கேயாஸ் கோட்பாடும் கொழுக்கட்டையும்!

கேயாஸ் கோட்பாடும் கொழுக்கட்டையும்!




     கேயாஸ் தியரி அல்லது பட்டாம்பூச்சி விளைவு (Chaos theory or Butterfly  effect) என்றதும் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என நினைக்கறீங்களா? அதாவது சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எங்கெங்கேயோ  நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு என தசாவதாரம் படத்தில் நம்ம உலக நாயகன் விளக்கியிருப்பாரே(!) அதுதான். 




        2008ம் ஆண்டில் வெளிவந்த அத்திரைப்படத்தை சமீபத்தில் மீண்டும் பார்க்க நேரிட்ட போது, நாம் நம் சிறு வயதில் பாடி விளையாடிய ஒரு நாட்டுப்புறப் பாடல் நினைவுக்கு வந்தது.



கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகல?

அடுப்பு எரியல, நான் வேகல.  


அடுப்பே அடுப்பே ஏன் எரியல?                                                                                  

மழை பெஞ்சுது நான் எரியல.


மழையே மழையே ஏன் பேஞ்ச?                                                                      

புல்லு வளர நான் பேஞ்சேன்.


புல்லே புல்லே ஏன் வளந்த?                   

மாடு திங்க நான் வளந்தேன். 


மாடே மாடே ஏன்  தின்ன?                                                                                 

பாலு சுரக்க நான் தின்னேன்.


பாலே பாலே ஏன்  சுரந்த?                                                                                 

பால்காரர் கறக்க நான் சுரந்தேன்.


பால்காரா பால்காரா ஏன் கறந்த?                                                     

அம்மா சொன்னா நான் கறந்தேன்.


அம்மா அம்மா ஏன் சொன்ன?                                                          

பாப்பா அழுதுச்சு நான் சொன்னேன்.


பாப்பா பாப்பா ஏன் அழுத?                                                                  

எறும்பு கடுச்சுது நான் அழுதேன்.


எறும்பே எறும்பே ஏன் கடிச்ச?                                                                         

எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பேனா?   



         ஆக ஒரு குழந்தை எறும்பு புற்றுக்குள் கைவிட்டதால கொழுக்கட்டை வேகாம போச்சு. இதுதான் பட்டாம்பூச்சி விளைவு எனப்படும் கேயாஸ் கோட்பாடு... 


என்ன சரியா இருக்கா? 




பிற கட்டுரைகளை படிக்க...

Comments

  1. You have wonderful writing skill. Don't consider about reader. Write whatever you felt.

    Today, this blog is transformed into tablet format for my severe headache. Thank you....

    Need some more from you...

    ReplyDelete
  2. Very nice,thanks for us to remembering our past life,

    ReplyDelete

Post a Comment