பொதிகைமலை பயணம் - பாகம் 5 பிரியா விடை
முந்தைய பாகங்களை படிக்க
பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி
பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்
பொதிகை மலை பயணம். - பாகம் 4 சிவ தரிசனம்
சுமார் 11 மணி அளவில் ஒரு திருப்பத்தில் ஒரு சிறிய விநாயகர் கோவிலை கண்டோம். முதல்நாள் பயணத்தின்போது அக்கோயிலை கவனிக்கவில்லை. அதற்காக விநாயகரிடம் மன்னிப்புக் கோரி அங்கு கிடைத்த தீர்த்தம், பூக்கள் மற்றும் நாம் வைத்திருந்த பழங்கள் மூலம் நம் பயணம் வெற்றியடைய அருள்புரிந்த அவருக்கு ஒரு சிறிய பூஜை செய்தோம். பிறகு அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் சுமார் 11.30 மணி அளவில் போனகாடு கட்டிலாகா அலுலவகத்தை அடைந்து, நமது வருகையை பதிவு செய்து நமது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.
பயணத்தின் சிறப்பம்சங்கள்
- புதுவிதமான பூக்களை கண்டது
- பலவிதமான
வழிகளில் பயணம்
செய்தது
- சமதள
பாதை
- காட்டுப்
பாதை
- விபூதி
மலை
- வழுக்கு
பாறை
- கயிற்றுப்
பாதை
- சற்று
கடுமையான மற்றும்
நீண்ட பயணம்
- பல
சிற்றருவிகளில் குளித்தது
- ஐந்தலை
மற்றும் நாக
பொதிகையை கண்டது
- அதன்
தத்துவம் உணர்ந்தது
- பொதிகை
உச்சியில் இருந்து
கரையார் அணையை
கண்டது
- நாம்
அனுபவித்த பலவித
காலநிலைகள்
- குளிர்,
வெய்யில், மழை
- அகத்தியர் மற்றும் சிவ தரிசனம் கண்டது
பொதிகைமலை - தமிழ்நாட்டு வழி (தற்போது அனுமதியில்லை)
மேற்குறிப்புகள்
பொதிகை
மலை தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள யுனெஸ்கோ (UNESCO) வால் அங்கீகரிக்கப்பட்ட பல்லுயிர் காப்பகம்
ஆகும். இங்கு பல்வேறு அறிய பறவைகள், விலங்குகள்
மற்றும் எண்ணிலடங்கா தாவர வகைகள் உள்ளன.
இது கடல்மட்டத்திலிருந்து 1,868 மீட்டர் (6,129 அடி) உயரம் கொண்டது.
பொதிகை
மலையில் கல்லாறு,
அட்டையாறு மற்றும் தாமிரபரணி போன்ற முக்கிய நதிகள் உருவாகின்றன. இவற்றில் கல்லாறு, நெய்யாறு என்ற பெயரிலும்; அட்டையாறு,
கரமனையாறு என்ற பெயரிலும் மேற்கு
திசையில் பாய்ந்து கேரளத்தை வளப்படுத்தி அரபிக்கடலில் கலக்கிறது. தாமிரபரணியாறு பொதிகை மலையின் அடியில் உள்ள பூங்குளம் என்னுமிடத்தில்
உருவாகி, கிழக்கு பக்கம் பாய்ந்து
வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தாமிரபரணி - சிறுகுறிப்பு
தாமிரபரணியின்
வரலாற்று பெயர் பொருநை நதியாகும். இது புராண ரீதியாக
மக்களின் பாவங்களை போக்க வல்லது. இதனால் தான் பொதிகைமலையின் அடிவாரத்திற்கு
பாபநாசம் என்று பெயர். இது புவியியல் ரீதியாக
தமிழ்நாட்டிலேயே உருவாகி, தமிழ்நாட்டிலேயே சுமார் 125 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வங்க கடலில் கலக்கும் ஒரு ஜீவநதி. - தாமிரபரணியில்
பாயும் நீரானது, தனது பெயருக்கு ஏற்றவாறு
இயற்கையிலேயே தாமிரத்தின்
(Copper) தன்மையை கொண்டுள்ளது. இவ்வாற்று படுகையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட தாமிர நிறுவனங்களே இதற்கு சாட்சி.
இத்தகைய
சிறப்புமிக்க நதியை போற்றி பாதுகாப்பது நமது கடமையாகும்.
நன்றிகள்
திரு. முரளி (கட்டிலாகா அதிகாரி) அவர்கள்
- அவர் காட்டின்
மீது கொண்ட
அக்கறைக்காக.
அனைத்து காட்டிலாகா பணியாளர்கள், அதிகாரிகள் குறிப்பாக பெண் அலுவலர்கள்
- கடினமான
சூழலில் தைரியமாக
பணிபுரிவதற்காக..
திரு. வர்கீஸ் ரவி
- பல்வேறு
அரிய தகவல்களை
பகிர்ந்து கொண்டதற்காக்க.
திரு. சிவகணேசன் அய்யா
- எங்கள் வழித்துணையாக
வந்து நல்
வழி காட்டியதற்காக்க.
திரு. கார்த்திக் மற்றும் சைதன்யா
- தங்கள்
அனுபங்களை பகிர்ந்து
வழி காட்டியதற்காக.
திரு. பரணி
- பல
தடைகளை மீறி
பயணத்தில் பங்கு
கொண்ட எனது
உற்ற தோழன்.
- இப்பயணம் மேற்கொள்ளவும், இப்பதிவை எழுதவும் செய்த உதவிக்காக.
- பல அழகிய புகைப்படங்கள் எடுக்க உதவியதற்காக
- மேலும் பல கூடுதல் தகவல்களை தந்தமைகாக.
இறுதியாக உங்களுக்கு
- இந்த நீண்ட கட்டுரையை வாசித்த உங்களின் ஆர்வம் மற்றும் பொறுமைக்காக.
அகத்திய பெருமான் நமக்கு துணைபுரிவராக...
அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்....
அடுத்த பதிவு
பொதிகை மலை புகைப்பட சிறப்பு தொகுப்பு
It's an amazing blog anna.... Really enjoyed a lot....
ReplyDeleteSuper....unkal katturai membada vazhathukkal
ReplyDeleteThanks giving blog superooooo superrrrrrrrr.....
ReplyDeleteI am awaiting for next.......
ReplyDelete