பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்

பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்


முந்தைய பாகத்தை படிக்க

பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி





  13 பிப்ரவரி 2020

   காலை 10.45 மணி - போனக்காடு காட்டிலாகா சோதனைச் சாவடியிலிருந்து இருந்து சரிவான பாதையில் நமது பயணம் தொடங்கியது. சிற்சில தீர்த்தங்களையும் (நீர்நிலைகள்),  ஏற்ற இறக்கங்களையும் கடந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு ஓர் சிறிய நீர்வீழ்ச்சியை அடைந்தோம். அங்கு குளிக்க அனுமதி இல்லை


இரண்டாம் நீர்வீழ்ச்சி

      மதியம் 12.45 மணி -  முதல் நீர்வீழ்ச்சியிலிருந்து மேலும் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு இரண்டாம் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். அங்கு நன்றாக குளித்து விட்டு, நாம் கொண்டு வந்த மதிய உணவை உண்டோம்இது முதல் நாள் பயணத்தின் 40-45 சதவிகிதம் ஆகும். நாம் செல்லும் வழியில் ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டருக்கும் ஒரு காட்டிலாகா முகாம் (Forest camp) உள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.



 மூன்றாம் நீர்வீழ்ச்சி

        மதியம் 1.15 மணி - இரண்டாம்  நீர்வீழ்ச்சியில் இருந்து புறப்பட்டோம். சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு மூன்றாம் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். அதில் குளிக்க முடியாது ஆனால் மேலிருந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தது. வழியெங்கும் ஒரே தண்ணீர் மற்றும் பூச்சிகள் சத்தம் நம் காதில் நுழைந்து நம்முடன் நமது மனதையும் காட்டின் உள்ளே கொண்டு சென்றது. இங்கு இருந்துதான்  இந்த பயணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சுமார் 15  நிமிடம் இங்கு தங்கி இளைப்பாறினோம்.

 

நான்காம் நீர்வீழ்ச்சி   

       பிற்பகல் 2.10 மணிசுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு நான்காம் நீர்வீழ்ச்சியை கண்டோம். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் குளிப்பதற்கு ஏற்றதாகவும் இருந்தது ஆனால் நேரமின்மை காரணமாக குளிக்க முடியவில்லை. அங்கிருந்து சுமார் 5 நிமிட பயணத்திலேயே ஐந்தாம்  நீர்வீழ்ச்சியை அடைந்தோம். அது மிகவும் ஆழமானது என்பதால் குளிக்க அனுமதி இல்லை. இந்த நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் கேரளத்தில் பாயும் கரமனையாற்றின்  துணைநதிகளாகும்இதன் மூலநதியான அட்டையாறு பொதிகை மலையிலிருந்து தான் உருவாகிறது.

 

அட்டையாறு வேட்டை தடுப்பு மையம்

        பிற்பகல் 2.20  மணிநீர்வீழ்ச்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இரண்டு வளைவான ஏற்றங்களை (அதை கடக்க குறுக்கு பாதைகளும் உண்டு)   கடந்த பின் வேட்டை தடுப்பு நிலையத்தை (Anti proaching camp) அடைந்தோம். அங்கிருந்து இருபுறமும் தர்பை புற்கள் நிறைந்த பாதை நடுவே, மதிய நேரத்தில்  சுற்றியுள்ள மேகங்கள் உரசி செல்லும் மலைகளை ரசித்தவாறே நடந்தோம்


        

புற்கள் நிறைந்த பாதை

    

மேகங்கள் உரசி செல்லும் மலைகள்

       

        தர்ப்பை புற்கள் நடுவே இருந்த சிறிய குன்றுகளை திடிரென பார்க்க அவை யானை அமர்ந்து இருப்பது போல தோற்றமளித்தது. அப்போது வெயில் முற்றிலும் குறைந்துசூழ்நிலை மிகவும்  ரம்மியமாக மாறியது. செல்லும் பாதை தொடர் ஏற்றமாக இருந்தது.


 

தர்பை புற்கள் நடுவே சிறுகுன்று

     பிற்பகல் 2.50 மணிபுற்கள் பாதை முடிந்து இடது புறம் பள்ளதுடன் கூடிய ஒரு சிறிய  காட்டு பாதையையும், மீண்டும் கடும் ஏற்றத்துடன் கூடிய புற்கள் பாதையையும்  அடுத்தது கடந்தோம்அதன்பின் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு சிறிய தீர்த்தத்தை (நீரூற்று) இடது புறம் கண்டோம். வலதுபுறத்தில் தூரத்தில் தெரிந்த புல்மேடு நாங்கள் செல்ல வேண்டிய திசையை தெரிவித்தது

 

தூரத்தில் தெரிந்த புல்மேடு - நடுவில்

     பிற்பகல் 3.15 மணி - வெள்ளியங்கிரி மலையை நினைவுப்படுத்தும் வெண்ணிற விபூதி பாறைகளை கண்டோம்அங்கு வெயில் புகா இடத்திலும், வீசிய இதமான காற்று எங்களை வருடி சென்றது. அதை அனுபவித்துக் கொண்டே நாம் முன்னர் பார்த்த புல்மேட்டை  அடைந்தோம்

 

வெண்ணிற விபூதி பாறைகள்

      பிற்பகல் 3.30 மணி  - நாம் ஏற்கனவே தொலைவிலிருந்து பார்த்த புல்மேட்டை அடைந்தோம். அங்கு சிறிது நேரம் அமர்ந்து தொலைதூரத்தில் தெரிந்த பேப்பரை அணையின்  அழகையும் மற்ற திசைகளில் நடந்த மேகங்களின் விளையாட்டையும் ரசித்து மகிழ்ந்தோம். அங்கு ஜியோ சிக்னல் நன்றாக கிடைத்ததுசுமார் 20 நிமிட ஓய்வுக்கு பின் நமது பயணத்தை தொடர்ந்தோம். கடுமையான ஏற்றங்கள் நிறைந்த காட்டு பாதை நடுவே சிற்சில ஓடைகள் குறுக்கிட்டன. மன்னிக்கவும்! நாம் தாம் அவற்றின் பாதையில் குறுக்கிட்டோம்


தெய்வ உருவ பாறைகள்
 

        மாலை 4.00 மணிபொழுது சாயும் முன்பே நன்றாக குளிரவும் ஓரளவு இருட்டவும் ஆரம்பித்தது. 20 நிமிட நடைக்கு பின், காட்டு பாதை சமதள பாதையாக மாறியதுஅதன் பின் சிறிது தூரத்தில் இடது புறத்தில் பல்வேறு தெய்வ உருவ வடிவங்கள் கொண்ட பாறைகளை கண்டு வணங்கினோம். அடுத்த 5 நிமிடத்தில்  அதிருமலை முகாமை அடைந்தோம்.


அதிருமலை முகாம்

 

அதிருமலை முகாம்

        மாலை 4.30 மணி - Base camp எனப்படும் அதிருமலை முகாமில் பதிவு செய்தபின் அவர்கள் கொடுத்த படுக்கையை (பாய்) பெற்றுக் கொண்டு தங்கும் அறையை அடைந்தோம். அங்கு ஆண்களுக்கான 3 பெரிய அறைகளும், பெண்களுக்கான ஒரு சிறிய அறையும்  உண்டு. முடிந்த அளவு சீக்கிரம் செல்வது நல்லது, இல்லையேல் இரவு நேர கடும்குளிரில் வெளியில் தங்க நேரிடலாம். தங்குமிடத்தை தேர்வு செய்தபின் அங்குள்ள உணவகத்தில் கருப்பு தேநீர் (Black tea) மற்றும் மிளகாய் பஜ்ஜியையும் ருசித்தோம்இரவு உணவுக்கான ரசீதை (Token) பெற்றுக் கொண்டு எங்கள் அறைக்கு திரும்பினோம்.   

 

உணவு ரசீது

    பின்னர்  கால்களை நன்றாக மசாஜ் செய்து சிறிது நேர ஓய்வுக்கு பின் முகாமிற்கு பின்புறம் இருந்த சிறிய ஆற்றில் நீராட புறப்பட்டோம்இது கேரளத்தில் பாயும் நெய்யாற்றின் மூலநதியான கல்லாறு ஆகும். அதிருமலை முகாமில் கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் உண்டு இருப்பினும் அது இயற்கையான ஆற்று நீருக்கு  ஈடாகாது. ஆனால் அங்கு தயவு செய்து  சோப்பு மற்றும் மற்ற இரசாயனங்களை பயன்ப்படுத்தாதீர்கள், அது நன்னீரை கழிவு நீராக மாற்றிவிடும் பாவச்செயலாகும்

 

அகத்தியர் மலை (அதிருமலை முகாம் பின்புறமிருந்து) 

   

 அதிருமலை முகாமின் பின்புறம் அகத்தியர் வீற்றிருக்கும் பொதிகை மலையின் தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. குளியல் எங்கள் உடலையும், பொதிகை மலையின் பேரழகு எங்கள் மனதையும் உற்சாகப்படுத்தியது. சிறுது நேரம் அங்கிருந்த ஒரு மேட்டில் அமர்ந்து அக்காட்சியை நன்றாக மனதில் உள்வாங்கிக் கொண்டோம்.

 


இரவு உணவு - கேரள கஞ்சி

        

    இரவு 7.00 மணி - உணவகத்தில் கொடுத்த கஞ்சியை அருந்தி பசியாறினோம். பின்னர் மறக்காமல் மறுநாள் காலைக்கான உணவு ரசீதை பெற்றுக் கொண்டு எங்கள் அறைக்கு திரும்பினோம்மறுநாள் பயணத்தை கருத்தில் கொண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே சுமார் 8 மணி அளவில் உறங்க சென்றோம்உடல் அசதியில் நன்றாக உறக்கம் வந்தாலும் நள்ளிரவுக்கு பின் வீசிய கடுங்குளிர்  எங்கள் உறக்கத்தை சிறிது அசைத்து பார்த்தது.


தொடரும்...


அடுத்த பாகம்

பொதிகைமலை பயணம் - பாகம் 3 சிகரம் நோக்கி

Comments

  1. சிறந்த பயணக் கட்டுரை. படிக்கும் போது உடன் பயணிக்கும் அனுபவத்தை தருகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. It is really interesting anna.... your narrations.... tamil is always best to express our feelings..... super....

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை..‌ நம் தாய்மொழியை விட நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த மொழியோ, வழியோ இல்லை

      Delete
  3. கண்களுக்கு குளிர்ச்சி மனதுக்கு இதமானதாக

    ReplyDelete
  4. Wow nice... Such a beautiful narration. When I read, the feel is equivalent to real time feel. Really we missed it....

    ReplyDelete
  5. Katturai arumai athil entha matru karuthum ellai atheysamayam oru payanathin anupavathai padipathu pondru ellamal kudavey payanapaduvathu Pol erunthal ennum sirapaka erukum .....
    Ex : ponniyin selvan

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிச்சயமாக முயற்சி செய்கிறேன்

      Delete
  6. Neenkal parthu rasitha vishayankalai sollum pothu azhkaka erukirathu .... Rasitha vishayankalai oovamaiyodu sonnal sirapaka erukum en thazmaiyana karuthu

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிச்சயமாக முயற்சி செய்கிறேன்

      Delete
  7. Katturaiku Nadu naduvey neenkal edukum natural photo's upload panna unka photography talent um veliya theriya varum ..... Pls try

    ReplyDelete
    Replies
    1. புகைப்படங்களுக்கென தனியாக ஒரு சிறப்பு பதிவு உள்ளது. விரைவில்.....

      Delete
  8. Baskar,

    Feels great!! to read your experience. Happy for you!!

    Would love to join you with atleast next one :-)

    ReplyDelete

Post a Comment